Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஹாட் காபியை ஹாட்டான உடையில் ஹாயாக பருகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை : தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார்
கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறைவாக ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்பொழுது ஹாட் காபியை ஹாட்டான உடையில் ஹாயாக பருகும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்
பொதுவாக முன்னணி நடிகைகள் யாரும் அவ்வளவு எளிதில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அப்படி ஒத்துக் கொண்டு நடித்தால் மார்க்கெட் விழுந்து விடுவோமோ என பலரும் நினைப்பதுண்டு ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் என்றால் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் புகுந்து விளையாடுவார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கை பாசம் அனைவரின் மனதையும் தொட்டது.

மொத்தமாக தீனி போட்டது
கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தவர் க பெ ரண சிங்கம் மிகப்பெரிய வெற்றியை மட்டுமல்லாமல் புகழையும் பெற்றுத்தந்தது. ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு மொத்தமாக தீனி போட்டது போல க பெ ரண சிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பார்க்கும் அனைவரையும் மிரட்டியது

தி கிரேட் இந்தியன் கிச்சன்
திட்டம் இரண்டு,பூமிகா என ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வருகிறார். ஆர் கண்ணன் இயக்கி தயாரித்து வரும் இப்படத்தில் ராகுல் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்து வருகிறார்

ஹாட் காபியை ஹாட்டான உடையில்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது ரிபப்ளிக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர்ஜமுனா, ரிபப்ளிக் என ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்க இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்துள்ளார். ரசிக்கும் அளவான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இப்பொழுது செம ஹாட் காபியை ஹாட்டான உடையில் ஹாயாக கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகிறது.