கடுகளவு பிரேக் மிளகளவு ஆக்சிலேட்டர் அழுத்துங்க... டிரைவர் ஜமுனாவின் டிரைவிங் டீச்சர் அலப்பறைகள்

சென்னை: வத்திக்குச்சி திரைப்பட இயக்குநர் கின்சிலின் இயக்கத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா.

18 ரீல்ஸ் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டது, அதை வைத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது, தன்னுடைய பழைய படங்களில் பிடித்தது என பலவற்றைப் பற்றி ஐஷ்வர்யா கலகலப்பாக பேட்டி கொடுத்துள்ளார்.

காக்கா முட்டை

காக்கா முட்டை

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் தயங்கினேன். அப்போது எனக்கு 22 வயதுதான் இருந்தது. ஆனால், இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருப்பேன். டல் மேக்கப்புடன், உடல் முழுக்க தூசி படிந்திருக்க, நக இடுக்குகளில் அழுக்கோடு அந்தப் படம் முழுக்க நடித்திருப்பேன். ஆனால் வட இந்தியர்கள் உள்பட படம் பார்த்த அனைவரும் அந்தக் கதாபாத்திரத்தை சிலாகித்து பேசுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் அனைவரும் முதலில் கேட்பது காக்கா முட்டை திரைப்படத்தை பற்றிதான் என்று ஐஷ்வர்யா கூறியிருக்கிறார்.

வட சென்னை இரணசிங்கம்

வட சென்னை இரணசிங்கம்

வட சென்னை திரைப்படத்தை பொருத்தவரை முதலில் என்னை கெட்ட வார்த்தை பேச வைத்து, ஆடிஷன் செய்து தேர்வு செய்தார் இயக்குநர் வெற்றிமாறன். நிறைய நபர்கள் அந்தப் படத்தின் 2-ஆம் பாகம் எப்போது வரும் என்று கேட்கிறார்கள். அதே எதிர்பார்ப்போடுதான் நானும் இருக்கிறேன். கா.பே.இரணசிங்கம் எனக்கு மிகவும் பிடித்த படம். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய ஊரில் பல பேர் வெளிநாடுகளில்தான் இருக்கிறார்கள். அந்த ஊரில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் பத்தாயிரம் நபர்கள் வெளிநாட்டிலேயே இறந்துள்ளதாக மக்கள் கூறினார்கள். படத்தில் நடிக்கும் போதும் அதனுடைய தாக்கம் என்னுள் வெளிப்பட்டது.

முதல் கார்

முதல் கார்

முதன் முதலில் என் சம்பளத்தில் வாங்கியது ஐ 10 ஆட்டோமெட்டிக் கார்தான். அதில்தான் நான் டிரைவிங் கற்றுக் கொண்டேன். எனக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தவர் நகைச்சுவையாக சொல்லிக் கொடுப்பார். கடுகளவு பிரேக்கை அழுத்துங்கள், மிளகளவு ஆக்சிலேட்டரை அழுத்துங்கள் என்று உதாரணத்தோடு சொல்லிக் கொடுப்பார். அப்படி இப்படி தட்டுத்தடுமாறி சாலைகளில் பலரிடம் திட்டு வாங்கித்தான் கார் ஓட்ட கற்றுக் கொண்டேன், அது இப்போது டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளின் நடிக்கும் அளவிற்கு உதவியிருக்கிறது.

இயக்குநர் மறுப்பு

இயக்குநர் மறுப்பு

படத்தின் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளிலும் நான்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக நடித்தேன். ஒரே ஒரு காட்சியில் லாரி என்னுடைய கார் எதிரே முட்டுவது போல் சூழ்நிலை இருக்கும். அதில் மட்டும் இயக்குநர் என்னை நடிக்க விட மாட்டேன் என்று மறுத்துவிட்டார். என் அண்ணனும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் ஒரு காட்சி எடுக்கும் பொழுது இயக்குநரிடம் இவளுக்கு கார் ஓட்டவே தெரியாது என்று நக்கல் அடித்தான். உடனே எனக்கு கோபம் வந்து அவன் நடித்த அந்த ஷாட்டில் காரை வேகமாக, ஆனால் பாதுகாப்பாக ஓட்டி அவனை பயமுறுத்தினேன் என்று வேடிக்கையாக கூறியிருக்கிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X