Aishwarya Lakshmi Birthday - பொன்னியின் செல்வனில் கலக்கிய பூங்குழலி.. ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாள்

சென்னை : Aishwarya Lakshmi Birthday (ஐஸ்வர்யா லட்சுமி பிறந்தநாள்) பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக கலக்கிய ஐஸ்வர்யா லட்சுமியின் 32ஆவது பிறந்தநாள் இன்று.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஐஸ்வர்யா லட்சுமி. கடந்த 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பிறந்தார். அடிப்படையில் மருத்துவரான இவருக்கு மாடலிங் மீது தீராத ஆர்வம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் பத்திரிகைகளின் அட்டை படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஃப்ளவர் வேர்ல்டு என்ற பத்திரிகைக்கு கொடுத்த போஸ் ஃபேமஸானது. அதனையடுத்து அக்‌ஷயா ஜுவல்லரிஸ் உள்ளிட்ட நகைக்கடைகளுக்கும் மாடலாக இருந்தார்.

Actress Aishwary Lakshmi 32nd Birthday Today

நடிப்பில் எண்ட்ரி: அவர் மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி அவர் மலையாளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான என்ஜன்டுகலுடே நாட்டில் ஒரிடவலே என்ற படத்தின் மூலம் எண்ட்ரி ஆனார். அதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்தார்.அந்தப் படத்தைத் தொடர்ந்து மாயநதி, வரதன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ஃபேமஸ் ஆனார்.

தமிழில் ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இருந்தாலும் இதற்கு முன்னதாகவே விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் படத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஜகமே தந்திரம் படத்தில் ஈழத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாகவே கவனம் ஈர்த்தார்.

Actress Aishwary Lakshmi 32nd Birthday Today

தமிழில் பலத்த வரவேற்பு: அதனைத் தொடர்ந்து புத்தம்புது காலை விடியாதா, கேப்டன், கார்கி, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பொதுவாக மலையாள தேசத்து நடிகைகள் மீது தமிழ் ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கும் என்பதற்கேற்ப சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா லட்சுமியை கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் தமிழில் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார்.

பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி: அவரது கரியரில் முக்கியமான படங்களாக அமைந்தது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும், கட்டா குஸ்தி படமும்தான். பொன்னியின் செல்வனில் அவர் ஏற்றிருந்த பூங்குழலி கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். முக்கியமாக கல்கி எழுதிய பூங்குழலி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி உயிர் கொடுத்துவிட்டார் என்று கூறினர்.

மேலும் இனி பொன்னியின் செல்வன் பூங்குழலி என்றாலே ஐஸ்வர்யாதான் நினைவுக்கு வருவார் என்றும் படம் பார்த்தவர்கள் கூறினர். அதேபோல் கட்டா குஸ்தி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் போல்டான கதாபாத்திரம். ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று பிறந்தநாள்: அவரது நடிப்பில் கடைசியாக கிங் ஆஃப் கோத்தா படம் வெளியானது. இந்நிலையில் அவர் இன்று 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். தனது அழகாலும், நடிப்பாலும் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி விரைவில் முன்னணி நடிகை என்ற இடத்துக்கு வந்துவிடுவார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அவரிடம் அப்படிப்பட்ட திறமை இருக்கிறது. அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஐஸ்வர்யாவுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X