அர்ஜுன் குடும்பத்தில் அடுத்த சோகம்.. மகளுக்கு கொரோனாவாம்.. வீட்டு தனிமையில் இருப்பதாக அறிவிப்பு!

சென்னை: நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Arjun Sarja Daughter Tested Positive | Aiswarya Arjun, Dhruva Sarja,

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போதும் முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார். கடந்த மாதம் இவரது அக்கா மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, 39 வயதில் திடீர் கார்டியாக அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார்.

கதறியப்படி முத்தம்

கதறியப்படி முத்தம்

கர்ப்பிணி மனைவியை விட்டுச்சென்ற சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருமகனான நடிகர் சிருவின் உடலை கட்டியணைத்து கதறியப்படி முத்தம் கொடுத்தார் அர்ஜுன்.

துருவாவுக்கு கொரோனா

துருவாவுக்கு கொரோனா

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கலங்கச்செய்தது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் தம்பியான துருவா சர்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஐஸ்வர்யாவுக்கு கொரோனா

ஐஸ்வர்யாவுக்கு கொரோனா

இந்நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஐஸ்வர்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

நான் ஹோம் குவாரண்டைனில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உள்ளேன், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

தமிழில் பட்டத்து யானை

தமிழில் பட்டத்து யானை

தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X