அமலா பாலை தொடர்ந்து புதிய படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: புதிதாக உருவாகி வரும் படம் ஒன்றில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நிர்வாணமாக நடித்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் ஹிட்லர் டாஸ்க்கின் போது மிகவும் ரூடாக நடந்து கொண்டார். அதோடு சக போட்டியாளரான நடிகர் பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

மன்னிப்பு

மன்னிப்பு

இதனால் மக்களின் கடுப்புக்கும் கோபத்திற்கும் ஆளானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவரது நடவடிக்கையால் அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா தத்தாவின் அம்மா, அவரது நடவடிக்கைக்காக நடிகர் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார்.

ரன்னர் அப்

ரன்னர் அப்

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் இறுதிப் போட்டியில் ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியே வந்த ஐஸ்வர்யா தத்தா விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தினார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா தத்தா.

பப்ஜி படம் - தகவல்

பப்ஜி படம் - தகவல்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. தற்போது கெட்டப் பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் அதாவது பப்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பப்ஜி படம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நிர்வாணமாக..

நிர்வாணமாக..

பப்ஜி படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் ஒரு காட்சி ஷுட் செய்யப்பட்டது என்றும் இஅதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஆடையின்றி நிர்வாணமாக நடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த காட்சி படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் அவர் நிர்வாணமாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

பட்டியலில்..

பட்டியலில்..

ஏற்கனவே நடிகை அமலா பால் ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் நிர்வாணமாக நடித்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. நிர்வாணமாக நடித்த ஒரே காரணத்திற்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் அமலா பால் நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து ராஜாவுக்கு செக் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நிர்வாணமாக நடித்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X