நகுல் பட நடிகையா இது.. கன்னமெல்லாம் ஒட்டிப்போய்.. ஆளே அடையாளம் தெரியால் மாறிப்போன ஐஸ்வர்யா தத்தா!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி இளைத்து போய்விட்டீர்கள் என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்து பார்க்கும் மர்மம் என்ன உளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிளாமர் போட்டோ ஷூட்
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, அவ்வப்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

உள்ளாடைகள் தெரிய போட்டோ ஷூட்
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸில் உள்ளாடைகள் மொத்தமும் தெரிய போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அந்த போட்டோ பெரும் வைரலானது.

எவ்வளவு கவர்ச்சி
தொடர்ந்து தொடை அழகை காட்டியும் கிறங்க வைத்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதேபோல் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி கிறங்க வைத்தார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைத்ததுபோல் தெரியவில்லை.

நெட்டிசன்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னமெல்லாம் ஒட்டி
வெள்ளை நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற க்ராப் டாப் அணிந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இந்த போட்டோவில் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து போயுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

எவ்வளவு ஒல்லியாக?
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு என்ன ஆனது என கேட்டு வருகின்றனர். உங்களின் கழுத்து எவ்வளவு ஒல்லியாக உள்ளது என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஐஸ்வர்யா தத்தாவா இது?
இன்னும் சிலர் எப்படி இப்படி ஒல்லியானீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அட்டகாசம் செய்த ஐஸ்வர்யா தத்தாவா இவர் என கேட்கும் அளவுக்கு உள்ளார் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications











