மிரட்டும் மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது.. ஆச்சரியத்தில் ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடித்த மிளிர் படத்தின் மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொஞ்சும் தமிழ், கொள்ளையடிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களின் ஒரு கனவு கன்னியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது முகத்தை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டார்.

மிரள வைக்கிறது

மிரள வைக்கிறது

இவர் தனது அடுத்த படத்தின் போஸ்டர் லுக் ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்டுள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத வித்யாசமான ஒரு போஸ்டராக இது இருக்கிறது என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இப்போதுள்ள சூழலில் ஹீரோயின்களை மையமாக கொண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது ஐஸ்வர்யாவும் இணைந்திருக்கிறார்.

புதிய முயற்சி

புதிய முயற்சி

இவ்வாறு தனது அடுத்த படமான மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது அதில் இவர் தலை மற்றும் கைகளை ஒரு அழுக்கு துணியால் கட்டியுள்ளார். மேலும், வாயில் ஒரு கம்பை வைத்து கடித்து கொண்டு ஆக்ரோஷமாக கத்தியபடி இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளியான அந்த போஸ்டர் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. இதுவரை ஷாப்ட் கதாபாத்திரங்களில் மற்றும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிக் பாஸ் குயின் ஐஸ்வர்யா தற்போது ஆக்சனிலும் இறங்கியிருக்கிறார் என்பது இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் தெரிய வருகிறது.

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி பெருவாரியான மக்களின் மனதை வென்று ரன்னரப்பாக வந்த இவர் அந்நிகழ்ச்சி பின்பு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார். அந்த படங்களுக்கான ரிலீசை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த மிரட்டலான ஒரு போஸ்டர் வெளியாகி இருப்பது அவர்களை இன்னும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவர் "கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா" என்ற படத்தில் மகத் உடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படமும் தயாராகி வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

ரிலீசுக்காக காத்திருப்பு

ரிலீசுக்காக காத்திருப்பு

மேலும் இவர் அலேகா, பொல்லாதவன் உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு போன்ற படங்கள் வரிசை கட்டி கொண்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்த மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நம் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.

வரவேற்கத்தக்கது

வரவேற்கத்தக்கது

காலங்காலமாக ஆண்கள் மட்டுமே ஹீரோயிசம் காட்டி வந்ததை பார்த்து பழகிப்போன நமக்கு தற்போது ஹீரோயின்களும் ஹீரோயிசம் காட்டி கலக்குவது வரவேற்க தக்கதாக உள்ளது. இந்த படத்தை நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ளார், தினேஷ் ஆண்டனி இதற்கு இசையமைத்துள்ளார்.

நன்றி கூறி ஐஸ்வர்யா

நன்றி கூறி ஐஸ்வர்யா

தனது படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஐஸ்வர்யாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது. பல ரசிகர்களும், திரை பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி வரும் இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியும் கிரைம் பார்ட்னரான யாஷிகா ஆனந்த் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

வாங்க பழகலாம்

வாங்க பழகலாம்

இவர்கள் இருவரின் அன்பான வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ரசிகர் தனது நெடுநாள் ஆதங்கத்தை ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், எனக்கு ஒரு டவுட், காமனா எல்லாத்துக்குமே நாங்க தான் மூவி பார்க்கிறது ஆடியன்ஸ், ஆனா விஷ் பண்றது நாங்க ஆனா நீங்க செளிப்ரிடீஸ்க்கு மட்டும் ரிப்ளை பண்றீங்க, ஆடியன்ஸ் ரிப்ளைக்கு மட்டும் ரெஸ்பான்ஸ் ஏன் பண்றது இல்ல..

ரசிகரின் ஆசை

ரசிகரின் ஆசை

சரி ஆடியன்ஸோட எண்ணிக்கை அதிகமா இருக்கு அதனால உங்களால ரிப்ளே பண்ண முடியல அப்படின்னு கூட வெச்சுகிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு முப்பது பேருக்கு நீங்க ரிப்ளை பண்ணலாம், அப்போ யாஷிகா மாதிரி க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் சினி ஃபீல்டில் இருக்கிற உங்க பிரெண்ட்ஸ் மட்டும் வந்து படம் பார்த்தா உங்களுக்கு போதுமா? நான் கேட்டது உங்க மனசு காயபடுத்தி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க ஆனா எனக்கு கேக்கனும்னு தோணுச்சு. எல்லாருக்கும் ரிப்ளை பண்ணனும் எல்லாரையும் நீங்க ஈகுவலா நடத்தனும் அப்படிங்குறது என்னுடைய ஆசை. இதை பண்ணினா நீங்க இன்னும் ஆடியன்ஸ் கூட இன்னும் க்ளோஸா இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இனி என் கண் உங்கள் மீது

இனி என் கண் உங்கள் மீது

இப்படி தனது வாழ்த்துக்கு பதில் அளிக்காத ஐஸ்வர்யாவை போட்டு கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார் அந்த ரசிகர். இந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா, நீங்கள் கேட்ட கேள்வி சரியானதே இது என்னை காயப்படுத்தவில்லை, உங்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது இனிமேல் உங்களின் அனைத்து கமெண்ட்களின் மீதும் எனது கண் பார்வை எப்போதுமே இருக்கும் முடிந்தவரை பதிலளிக்கிறேன் என்றவாறு அவரின் மனக்குமுறலுக்கு ஆறுதல் அளித்தார் ஐஸ்வர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X