ஷூட்டிங் கேப்பில் ஜாலி டூர்... தாய்லாந்தை சுற்றிய 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி

By

சென்னை: மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கிடைத்த கேப்பில், தாய்லாந்தைச் சுற்றிப் பார்த்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பூங்குழலி

பூங்குழலி

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இதில், ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் ஹீரோயின்

தனுஷ் ஹீரோயின்

இவர், விஷாலுடன் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இவர் மலையாளத்தில் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்துக்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றதாகத் தகவல் வெளியானது.

படகு ஓட்டினார்

'படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. படத்தில், படகு ஓட்டும் காட்சி அவருக்கு இருக்கிறது. இதற்காக அவர் பயிற்சிப் பெற்றார்' என்று தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், படப்பிடிப்பு இடைவெளியில் தாய்லாந்தை சுற்றிப்பார்த்துள்ளார்.

க்வாய் ஆறு

க்வாய் ஆறு

அங்குள்ள க்வாய் ஆறு, பி பி தீவுகள் ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு தனது தலைமுடியையும் தாய்லாந்து பெண்கள் போல ஸ்டைலாக வெட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X