Aishwarya lekshmi:10 வயதிலேயே பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.. அவரே சொன்ன தகவல்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரியாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.

Actress Aiswarya lekshmi revealed she had affair with famous cricketer

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒருதலை காதல் : நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகமும் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் சமுத்திரக்குமாரி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் அவர் இயல்பாக பொருந்தினார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படமும் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

மலையாளப்பட நடிகையான ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தொடர்ந்து விஷால், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த ஆண்டில் மட்டுமே தமிழ், தெலுங்கு, மலையாளம் என 9 படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முன்னதாக கைதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அர்ஜுன் தாசுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணைந்து வெளியிட்ட புகைப்படம் இருவருக்கும் காதல் என்பதாக வைரலானது.

ஆனால் இந்தத் தகவலை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மறுத்திருந்தார். தாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்றும் இருவரும் சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் அதைத்தான் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அர்ஜுன் தாஸ் எப்போதும் உங்களுடயவர்தான் என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் காதல் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Actress Aiswarya lekshmi revealed she had affair with famous cricketer

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்ததன்மூலம் ஏராளமான இளம் ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய இளம்வயது காதல் குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். தான் 6ம் வகுப்பு படிக்கும்போதே கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒருதலையாக காதலித்ததாகவும் இந்தக் காதல் 5 வருடங்கள் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கிரிக்கெட் பார்க்கக்கூட நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. தொடர்ந்து அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷனல் டூரில், கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்களுடன் இணைந்து டெல்லி, செனைன, கோவை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X