பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கு.. அந்த டான்ஸர் மீது ஓவர் க்ரஷாம்.. அவங்களே சொல்லியிருக்காங்க!

பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கு.. அந்த டான்ஸர் மீது ஓவர் க்ரஷாம்.. அவங்களே சொல்லியிருக்காங்க!

Recommended Video

G.V.Prakash Sister Bhavani Sri Debut Movie | Ka pae Ranasingam • Vijay Sethipathi, Aiswarya Rajesh

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படகோட்டி பெண்ணாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு பிரபல டான்ஸர் மீது ஓவர் பிரியமாம்.

கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாயநதி படத்தின் மூலம் பிரபலமானார்.

தமிழில் விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, தற்போது பல படங்கள் கைவசம்.

நிவின் பாலி படத்தில்

நிவின் பாலி படத்தில்

டொவினோ தாமஸின் மாயநதி படத்தின் ரிலீசுக்கு முன்னதாக இவர் முதன் முதலாக நிவின் பாலி நடிப்பில் அதே 2017ம் ஆண்டு வெளியான ஜந்துகளிடையே நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வரதன், விஜய் சூப்பரும் பெளர்ணமியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தனுஷ் படம்

தனுஷ் படம்

விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படத்தை போலவே இந்த படமும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

படகோட்டி பெண்

படகோட்டி பெண்

தொடர்ந்து தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று படமான பொன்னியின் செல்வனில் படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜகமே தந்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் ரிலீசானால், கோலிவுட்டில் இவரும் ஒரு ரவுண்டு வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிடித்த டான்ஸர்

பிடித்த டான்ஸர்

இந்நிலையில், சின்ன வயசுல இருந்தே தனக்கு டான்ஸரும் நடிகையுமான சோபனா மீது ஓவர் க்ரஷ் என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மனம் திறந்து கூறியுள்ளார். தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தும், உலகளவில் நடனக் கலையை கொண்டு சென்ற சோபனாவை யாருக்குத் தான் பிடிக்காது.

சோபனா நடிப்பில்

சோபனா நடிப்பில்

"Heart and Soulful Crush" என சோபனாவின் புகைப்படங்களை பதிவிட்டு சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாரணே அவசியமுண்ட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பதிலாக நீங்களே நடித்திருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X