twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணி சார் என் மேல நம்பிக்கை வெச்சதற்கு நன்றி.. குயிலாக கூவிய குயிலி!

    |

    சென்னை : அமரர் கல்கியின் அழகான படைப்புகள் ஏராளமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமான படைப்பு பொன்னியின் செல்வன்.

    ஐந்து பாகங்களாக வெளியான போதிலும், இந்தக் கதையை அதன் வசீகரத்தை அனுபவிக்க பொறுமையாக அவை அனைத்தையும் படித்த ரசிகர்கள்தான் ஏராளம்.

    இந்தக்கதை தான் தற்போது மணிரத்னத்தின் முயற்சியில் திரைவடிவம் பெற்றுள்ளது. திரைப்படமாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    National Awards 2022: சுதா கொங்கராவுக்கு திடீரென 2 விருது… இது என்ன புது கணக்கு?National Awards 2022: சுதா கொங்கராவுக்கு திடீரென 2 விருது… இது என்ன புது கணக்கு?

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான வகையில் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    இந்தப் படத்தின் கேரக்டர்களை மிகவும் சிறப்பாக தேர்வு செய்து தான் எப்போதுமே சிறப்பான இயக்குநர்தான் என்பதை நிரூபித்துள்ளார் மணிரத்னம். சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன், நந்தினி என அனைத்து கேரக்டர்களும் வசீரிக்கின்றன.

    அழகான காஸ்ட்யூம்

    அழகான காஸ்ட்யூம்

    அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காஸ்ட்யூம் மேலும் மிரட்டுகிறது. தோட்டா தரணியின் கலை எப்போதுமே ரசிகர்களை கொள்ளைக் கொள்ள தவறாது என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் அதிகமான பலத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ஏஆர் ரஹ்மானின் இசை படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.

    சிறப்பான தளபதி

    சிறப்பான தளபதி

    இவர்கள் அனைவரையும் சிறப்பான வகையில் வேலைவாங்கும் தளபதியாக இயங்கியுள்ளார் மணிரத்னம். இவர்களின் ஒத்துழைப்போடு படத்தை 150 நாட்களில் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் எப்படி 150 நாட்களில் சாத்தியம் என்ற கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் இயல்பாகவே எழுகிறது.

    படகோட்டிப் பெண் குயிலி

    படகோட்டிப் பெண் குயிலி

    இந்தப் படத்தில் குயிலி என்ற படகோட்டி பெண்ணாக நடித்து அனைவரின் இதயங்களிலும் இடம்பெற்றுள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. கோடியக்கரை படகோட்டி பெண்ணாக பூங்குழலி கேரக்டரில் நடித்துள்ளார் இவர். சேந்தன் அமுதனின் காதலியான இவர், வந்தியத் தேவனை இலங்கைக்கு அழைத்து செல்லும் கேரக்டரில் நடித்துள்ளார்.

    அருண்மொழி வர்மனிடம் காதல்

    அருண்மொழி வர்மனிடம் காதல்

    இளவரசன் அருண்மொழிவர்மனிடம் காதல் கொள்கிறார் பூங்குழலி. அருண்மொழி வர்மனும் பூங்குழலியிடம் காதல் கொள்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் இதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இந்தக் கதையில் மிகவும் முக்கியமான கேரக்டராகவும் தைரியமான கேரக்டராகவும் இந்தக் கேரக்டர் காணப்படுகிறது.

    ஐஸ்வர்யா லெக்ஷ்மி நன்றி

    ஐஸ்வர்யா லெக்ஷ்மி நன்றி

    இதனிடையே தன்னை நம்பி இதுபோன்ற சிறப்பான கேரக்டரை கொடுத்த மணிரத்னத்திற்கு பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த பூங்குழலியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Aiswarya lekshmi thanks to director Mani ratnam for her role in Ponniyin selvan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X