எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன்.. நடிகை ஐஸ்வர்யாவின் அதிரடி பேட்டி!
சென்னை : எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே படங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கு படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா, கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ராசுகுட்டி படத்தில் நடித்து பிரபலமானார்.

நடிகை ஐஸ்வர்யா
ராசுகுட்டி படத்திற்கு பிறகு மில் தொழிலாளி, தையல்காரன், மீரா, உள்ளே வெளியே, காசி,பஞ்சதந்திரம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஆறு, பரமசிவம், பிரியசகி, பழனி, அபியும் நானும் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதில் சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கதாபாத்திரம் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.

பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
தற்போது,அக்கா,அம்மா,அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பெண்கள் தலையை குனிந்துக்கொண்டே செல்வதால், பின்னால் யார் வருகிறார் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கையில் சேஃப்டி பின் அல்லது காம்பஸ் வைத்துக்கொள்ள வேண்டும் தப்பான எண்ணத்தில் அருகில் வந்தால் நச்சுனு குத்துவிடுங்கள் என்றார்.

குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன்
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா, பெண்கள் குடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எல்லாமே ஒரு செயற்கையான மகிழ்ச்சிதான், அதன் பிறகு ரியாலிட்டிக்கு வந்தே தீரவேண்டும். குடிப்பதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று காட்டாயப்படுத்தி நிறுத்த தேவையில்லை. காலையில் எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன், ஆனால், அனைத்திற்கும் ஒரு வரைமுறை இருக்கு என்றார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்
மேலும், நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன், வாழ்க்கையில் நிறைய வலி கொடுக்கும் விஷயங்கள் நடந்து இருக்கலாம், சிலவற்றை சொல்ல முடியும், சிலவற்றை சொல்ல முடியாது இது தான் மன அழுத்தமாக வெளிவருகிறது. இதற்காக மன நலமருத்துவரிடம் ஆலோசனை செய்தேன் அவர் மெடிடேஷன் செய்ய சொன்னார். ஆனால், மெடிடேஷன் என்னை மிகவும் சோர்வாக்கியது. அந்த நேரத்தில் தான் என் சிறுவயது நண்பர்களை பேஸ்புக் மூலம் சந்தித்தேன். அவர்களிடம் பல விஷயங்களை பேசினேன், இப்போது, மனஅழுத்தம் குறைந்துள்ளது என்றார்.

சொந்தமாக யூடியூப் சேனல்
நடிகை ஐஸ்வர்யா, சவுண்டு சரோஜா என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், சமையல், அழகுக்கலை, சோப்பு தயாரிப்பு போன்றவற்றை செய்து வருகிறார்.சமீபத்தில், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் , சமுத்திரக்கனி நடித்த யானை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது, கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'டாடா' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது.


Click it and Unblock the Notifications











