விவாகரத்துக்கு அப்புறம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. மனம் திறந்த ஐஸ்வர்யா!
சென்னை : விவாகரத்தான பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என நடிகை ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
70களில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருந்த நடிகை லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தனது அம்மாவைப் போலவே சினிமாவில் தடம் பதித்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா
தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன், மில் தொழிலாளி, தையல்கரான், ராசுகுட்டி, மீரா, உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பாக்கியராஜூடன் இவர் நடித்த ராசுக்குட்டி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

சவுண்டு சரோஜா
திருமணம் செய்து கொண்டு சில காலம் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா, ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக மெட்ராஸ் பாஷை பேசி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், சவுண்டு சரோஜா என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில், சமையல், அழகுக்கலை போன்றவற்றை ரசிகர்களுக்கு டிப்ஸ் அளித்து வருகிறார்.

டாடா படத்தில்
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் , சமுத்திரக்கனி நடித்த யானை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்தார். குடும்ப செண்டிமென்ட் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'டாடா' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 10ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

வருத்தம் இல்லை
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஐஸ்வர்யா தனது திருமண வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் 1994ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன், சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டேன். பல வருடங்களுக்கு பின் தன்வீர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு க்யூட்டாக இரண்டு பசங்க இருக்காங்க என்றார். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்
அதே போல, நான் விவாகரத்து செய்த பின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் ஆனால் அதுவும் பாதியில் முடிந்து விட்டது. இதற்கு காரணம் என்னவென்றால், லவ் பண்ண ஆரம்பிக்கும் போது எது எல்லாம் பிடித்ததோ,அதை எல்லாம் முதலில் மாற்ற சொல்லுவார்கள். என்னைக்கு ஐ லவ் யூனு நாம சொல்லுகிறோமோ அன்னைக்கு முடிஞ்சது கதை. இந்த டிரஸ் போடாத, அவன் கூட பேசாத, அங்கே போகாதனு ஆர்டர் போடுவாங்க.

தாய்க்கு பின் தாரமா யார் சொன்னா
அதே போல, என் அம்மா எனக்கு ஊட்டி விடுவாங்க, என் அம்மா மாதிரி நீ இல்லை என்று சொல்லுவாங்க. நான் எதுக்கு அம்மாவா இருக்குனும், அம்மா, புள்ளைக்கு ஊட்டிவிடுவாங்க, நானும் என் பெண்ணுக்கு ஊட்டிதான் விடுவேன். தாய்க்கு பின் தாரம் என்று சொன்னவனை உதைச்சா சரியாக இருக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா தனது வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்கள் குறித்தும் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் தைரியமாக பேசி உள்ளார். இவருக்கு பல பெண்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











