கையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு!

சென்னை: கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு பாலிவுட்டின் முடிசூடா மன்னனான அமிதாப் பச்சனின் குடும்பமும் தப்பவில்லை.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த 11 ஆம் தேதி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

வீடு திரும்பினர்

வீடு திரும்பினர்

ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் இருவரும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 நாட்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் நேற்று முன்தினம் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், என்னுடைய ஏஞ்சல் டார்லிங் ஆரத்யா, பா.. அபிஷேக் பச்சன் மற்றும் என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.

பாதுகாப்பாங்கள் இருங்கள்

பாதுகாப்பாங்கள் இருங்கள்

உண்மையிலேயே எப்போதும் கடன் பட்டவராக இருப்பேன், உங்கள் அனைவருக்கும் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். நீங்கள் நலமாக இருக்க எப்போதும் என்னுடைய அன்பும் பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாக உள்ளது. நன்றாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

ஹார்ட்டின் ஷேப்பில்..

ஹார்ட்டின் ஷேப்பில்..

மேலும் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தப்படியும் கையில் ஹார்ட்டின் ஷேப்பில் அன்பை வெளிப்படுத்தியப்படியும் உள்ள போட்டோவையும் ஷேர் செதுள்ள ஐஸ்வர்யா ராய். அவரது இந்த பதிவை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X