Thug Life - இத்தனை வருட திரை வாழ்க்கையில் இதுதான் முதன்முறை.. கமல் ஹாசனுக்கு நடக்கப்போகும் விஷயம் இதுவா?
சென்னை: அரசியலிலிருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கும் கமல் ஹாசன் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் கமல் ஹாசன்.
கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். நடிப்பு, இயக்கம், நடனம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, படங்களை தயாரிப்பது என சினிமாவின் அனைத்து தளங்களிலுமே தனது முத்திரையை ஆழமாக பதித்தவர். அவருக்கு சினிமாவில் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலர் கூறுவார்கள். ஆனால் அவரோ இன்னமும் சினிமாவில் நான் கற்றுக்கொண்டுதான் இருக்கிறே என பவ்யமாக சொல்வார். ஆனால் அவர்தான் தமிழ் சினிமாவில பலருக்கு ரோல்மாடல். தற்போதைய சென்சேஷனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்று அனைவரும் அறிந்ததே.

மீண்டும் சினிமாவில்: சில காலம் அரசியல் தளத்தில் மும்முரமாக இருந்த கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். படம் அதிரிபுதிரி ஹிட். இதனையடுத்து இந்தியன் 2 படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது சிஜி பணிகளும் பிற பணிகளும் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. அநேகமாக இந்த வருட ஏப்ரலில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமல் ஹாசனின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
தக் லைஃப்: சினிமாவில் மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கும் கமல் ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இணைந்த நாயகன் படம் மிகப்பெரிய கிளாசிக்காக இருக்கிறது. டான் படம் ஏதேனும் வந்தால் அந்தப் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது என்ற நிலையை நாயகன் உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே மீண்டும் இரண்டு பேரும் இணைவதன் காரணமாக அந்த கிளாசிக் டச் மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
ரங்கராய சக்திவேல் நாயக்கன்: அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். இந்த சூழலில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஐஸ்வர்யா ராய்: படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் இதுவரை கமிட்டாகியிருக்கின்றனர். இந்நிலையி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும்; திரிஷா ஜெயம் ரவி அல்லது துல்கர் சல்மானுக்கு ஜோடியாகலாம் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மையென்றால் கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











