நேரடியாக விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா".. வெளியானது அசத்தல் ப்ரமோ!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கில் ராம்பண்டு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் 2010ஆம் ஆண்டு வெளியான நீதான அவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

எந்த கதாப்பாத்திரம் என்றாலும்
எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பால் கச்சிதமாக செய்து முடித்து வருகிறார். வில்லேஜ் கதாப்பாத்திரம் என்றாலும் சரி மாடர்ன் கேர்ள் என்றாலும் சரி பிச்சு உதறி வருகிறார். இதேபோல் மனைவி, மகள், தங்கை, ஹீரோயின் என எந்த கேரக்டர் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.

கடைசியாக திட்டம் இரண்டு படம்
இதனால் கிராமத்து கதை என்றாலே இயக்குநர்களின் முதல் ஆப்ஷனாக உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடைசியாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் திட்டம் இரண்டு. கடந்த ஜூலை 30 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி பிளாட்ஃபார்மில் இப்படம் ரிலீஸ் ஆனது.

துருவ நட்சத்திரம் படம்
க்ரைம் த்ரில்லரான இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் பூமிகா, டிரைவல் ஜமுனா, விஷ்ணு விஷாலுடன் மோகன் தாஸ், விக்ரமுடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ்
இதேபோல் தெலுங்கில் ரிப்பப்ளிக், டக் ஜகதீஷ், அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக், மற்றும் தி கிரேட் இந்தியன் கிட்சன் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

பூமிகா டிவியில் ரிலீஸ்
நடிக்க வந்த இந்த 10 ஆண்டுகளில் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் திரையரங்குக்கு வரும் முன்பே நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது.

விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுகுறித்து ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய் டிவி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'பூமிகா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம்
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25வது படமாகும். இந்தப் படத்துக்கு ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

முன்பே ரிலீஸாக வேண்டிய படம்
முன்பே ரிலீஸாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது. சில படங்கள் தொலைக்காட்சி சேனல்களில் ரிலீஸ் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் பூமிகா
அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பூமிகா' திரை படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் விஜய் டிவியில் வெளியாகியுள்ளது.

வரும் 22ஆம் தேதி மாலை 3 மணி
விஜய் டிவி இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளது. அதில் திரைக்கு வருவதற்கு முன்பே நேரடியாக உங்கள் இல்லத்திரையில் ஒரு சிறப்பான திரைப்படம் பூமிகா என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் 'பூமிகா' படம் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











