ரெண்டு பக்கமும் புஸ் புஸ்ஸுன்னு.. ஹாலிவுட் நடிகையை போல் கெத்துக்காட்டும் 'கிராமத்து' நடிகை!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லேஜ் பேஸ்டு ஸ்டோரியில் நடித்து கிராமத்து குயினாக வலம் வருகிறார்.

நடிப்புக்கு பாராட்டு
கடைசியாக அவரது நடிப்பில் க பெ ரணசிங்கம் படம் வெளியானது. இந்தப் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது.

6 படங்கள் கைவசம்
தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீப காலமாக கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

ஏஞ்சல் போன்று போஸ்
அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டு ஒட்டு மொத்த இன்ஸ்டாவையும் தகிக்கவிட்டுள்ளார். அதாவது வெள்ளை நிற நீண்ட கவுனில் ஏஞ்சல் போன்று போஸ் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் ஹீரோயின்
அகலமான நெக்கில் இரண்டு கைகளிலும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்துக்கொண்டு வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஹாலிவுட் ஹீரோயின் போன்று இருக்கிறீர்கள் என்றும் ஏஞ்சல் போன்று இருக்கிறீர்கள் என்றும் கூறி ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











