ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு… ஓடிடியில் ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !

சென்னை : கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்துக் கட்டப்பணிகளும் முடிவடைந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

பூமிகா, ரிபப்ளிக், ட்ரக் ஜெகதீஸ், அய்யப்பனும் கோஷியம் தெலுங்கு ரீமேக்கில் ராணா மற்றும் பவன் கல்யாணுடன் லீட் ரோலில் மோதுகிறார். இதேபோல, டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ் தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவநட்சத்திரம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சவாலான கதாபாத்திரம்

சவாலான கதாபாத்திரம்

கனா திரைப்படத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இதையடுத்து, கபெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சவால் மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இருந்தார்.

த்ரில்லர் மூவி

த்ரில்லர் மூவி

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். க்ரைம், த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது, திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்நிலையில் இத்திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்குக்கு வருவார்களா என்பது சந்தேகமே இதனால், திட்டம் இரண்டு திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X