தங்கத்தாமரை மகளே.. ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அதகள போட்டோஸ்!

சென்னை : தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஆட்டிப்படைத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

கதாநாயகியாகவும் அதேசமயத்தில் குணச்சித்திர நடிகையாகவும் தன்னுடைய இமேஜை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறந்த கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் நடிகைகளில் ஒரு சிலரில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரைப்படங்களில் தொடர்ந்து குடும்ப பெண் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று இணையத்தை அதகளம் செய்து வருகிறது.

வெற்றி நாயகி

வெற்றி நாயகி

தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை தாண்டி இன்று வெற்றி நாயகியாக முடிசூடி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வளர்ந்து வரும் பல ஹீரோயின்களுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருந்து வருகிறார்.

பெரிதாக சென்றடையவில்லை

பெரிதாக சென்றடையவில்லை

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்கு முன் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக சென்றடையவில்லை.

சவாலான கதாபாத்திரம்

சவாலான கதாபாத்திரம்

விஜய் சேதுபதியுடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவருக்கு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான காக்கா முட்டை திரைப்படம் தேசிய அளவில் மிகச் சிறந்த நடிகையாக அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஒரு சவாலான கதாபாத்திரத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு சிறந்த கதாநாயகியாக மக்கள் முன் உருவெடுத்து வெற்றிகரமாக வலம் வருகிறார்.

 லீட் ரோல்

லீட் ரோல்

காக்கா முட்டை படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் முன்னணி இயக்குனர்களாக உள்ள கௌதம் மேனன் மற்றும் சீனு ராமசாமி போன்றோரின் படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது ஒரு படத்தில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்.

திட்டம் இரண்டு

திட்டம் இரண்டு

ஹீரோக்களுடன் டூயட் மட்டுமே பாட பயன்படுத்தி வந்த காலம் மாறி தற்போது கதாநாயகிகள் பலரும் லீட் ரோலில் நடிக்கின்ற கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது ஒரு படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். ஏண்டா தலையில எண்ண வைக்கல திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இரண்டாவது படமான "திட்டம் இரண்டு" படத்தில் தற்போது லீட் ரோலில் நடித்து வருகிறார்.

சமூக அரசியல்

சமூக அரசியல்

பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை போன்ற படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் மீண்டும் இணைந்து நடித்து வரும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக அரசியலையும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மையமாகக்கொண்டு அனல் தெறிக்கும் வசனங்களுடன் பலரையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாவில் பாதித்துள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் அதகள படுத்தி வருகிறது.

Recommended Video

Kaka Muttai சின்ன பசங்க இப்போ Hero மாறி இருக்காங்க | Dhanush
மயக்கும் பார்வையுடன்

மயக்கும் பார்வையுடன்

தனது முன்னழகை காட்டிய படி தங்க நிற ஆடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் இதுவரை ஐஸ்வர்யாவை குடும்ப பெண்ணாக பார்த்து வந்த ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இணையதளத்தில் அதகளம் செய்து வருகிறது. இந்த தங்கமுலாம் பூசப்பட்டவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு அதில் "தங்கம் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்று" என தலைப்பிட்டு ரசிகர்களை மயக்கும் பார்வையுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X