க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்.. யாரையும் காப்பியடிக்கல.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஷேர் செய்துள்ள த்ரோபேக் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

Aishwarya Rajesh ன் போலியான முகம் • தமிழச்சியே இல்ல

தமிழ் சினிமாவில் தரமான நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

தனது அட்டகாசமான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தென்னிந்திய மொழிகள்

தென்னிந்திய மொழிகள்

கிராமத்து பெண் வேடங்களில் பிச்சு உதறி வருகிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

அவரது நடிப்பில் தயாராகியுள்ள கா பெ ரணசிங்கம், பூமிகா ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. ட்ரக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் திட்டம் இரண்டு என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

லாக்டவுன் என்பதால்

லாக்டவுன் என்பதால்

மேலும் கவுதம்மேனனின் துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் நடிகைகள் பலரும் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகின்றனர்.

க்ரேஸி எக்ஸ்பிரஷன்ஸ்

க்ரேஸி எக்ஸ்பிரஷன்ஸ்

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் க்ரேஸி எக்ஸ்பிரஷன்ஸ் என த்ரோபேக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

காப்பியடிக்கவில்லை

காப்பியடிக்கவில்லை

அதில் கோபம், ஆச்சரியம், அழுகை, பயம், மிரட்டல், சலிப்பு, ரொமான்ட்டிக் லுக் என 12 எக்ஸ்பிரஷன்களை கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் 2018ஆம் ஆண்டு எடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், யாரிடமிருந்தும் காப்பியடிக்கவில்லை என பிராக்கெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மீரா மிதுனுக்கு பதிலடி

மீரா மிதுனுக்கு பதிலடி

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை பார்த்து காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்துவதாவும் அவர் ஒரு காப்பி கேட் என்றும் குற்றம்சாட்டியிருந்தார் மீரா மிதுன். இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படி குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பிரபலங்கள் லைக்ஸ்

பிரபலங்கள் லைக்ஸ்

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த த்ரோபேக் போட்டோவை, பலரும் லைக் செய்துள்ளனர். கமெண்ட் மூலமும் பாராட்டியுள்ளனர். சினிமா பிரபலங்களான ரெஜினா கேசன்ட்ரா, ஷ்ரேயா ரெட்டி உள்ளிட்டோரும் லைக் செய்து, லவ்டு இட் என பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X