லவ்வர் போட்டோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அள்ளும் லைக்ஸ்.. குவியும் வாழ்த்து!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நீதான் அவன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடித்த காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும், தர்மதுரை படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார்.

விஜய் தேவரகொண்டா
இதேபோல் கனா படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நான்கு ஹீரோயின்கள்
வோர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ்,, கேத்ரின் தெரேசா, இஸபெல் லெயிட் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இருவரும் இடம் பெற்றுள்ளனர்
இப்படத்தின் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டிவிட்டர் பக்கத்தில்
இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என்றும் படத்தின் டீசர் வரும் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறர்.

ரிலீஸ்க்கு காத்திருப்பு
இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











