அட ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்.. நம்ம பூரணா புருஷனாமே! வைரலாகும் ரியல் (vs) ரீல்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரியல் (vs) ரீல் என பகிர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்த்திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

அப்பா, தாத்தா
ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பமே சினிமாத்துறையை சேர்ந்ததுதான். அவரது அப்பா ராஜேஷ், தெலுங்கில் பிரபல நடிகர் ஆவார். அவரது தாத்தா அமர்நாத்தும் நடிகர்தான்.

சீரியல் நடிகர்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டாவும் ஒரு நடிகர்தான் என தெரியவந்துள்ளது. இவர் அழகு சீரியலில் பூரணாவின் கணவராக மகேஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மணிகண்டா இதுவரை 150க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சிவவின் தங்கை
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படம் வரும் வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ளது.
ரியல் வெர்சஸ் ரீல்
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரியல் வெர்சஸ் ரீல் என ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் தனது அண்ணன் மணிகண்டா அவரது மனைவியுடன் இருக்கும் போட்டோவையும், நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சிவா கார்த்திகேயன் மற்றும் அனு இமானுவேலுடன் தான் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

அவரா உங்க அண்ணன்?
இந்த போட்டோவை பார்த்த பலரும் உங்க அண்ணன் சன் டிவி சீரியலில் நடித்து வருகிறாரா என கேட்டு வருகின்றனர். மேலும் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











