யார்க்கிட்ட.. ஐஸ்க்ரீம் கடைக்காரருக்கு அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வியூஸை குவிக்கும் வீடியோ!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஷேர் செய்துள்ள க்யூட் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து வருகிறார்.

எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கைவசம் பல படங்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார்.

த்ரோபேக் வீடியோ

த்ரோபேக் வீடியோ

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டுள்ள த்ரோபேக் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வித்தைக் காட்டும் கடைக்காரர்

வித்தைக் காட்டும் கடைக்காரர்

அதாவது சுற்றுலா சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் டர்க்கிஷ் ஐஸ்க்ரீம் கடை ஒன்றில் கடைக்காரரிடம் ஐஸ்க்ரீம் கேட்கிறார். வழக்கமாக ஐஸ்க்ரீம் கேட்கும் வாடிக்கையாளர்களிடம் சிறிது நேரம் தனது வித்தையை காட்டி விளையாடுவார் கடைக்காரர்.

விழி பிதுங்கிய கடைக்காரர்

விழி பிதுங்கிய கடைக்காரர்

அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷிடம் தான் வைத்திருந்த கம்பியில் கோனை வைத்து நீட்டி ஏமாற்ற முயன்றார். ஆனால அதனை ஐஸ்வர்யா ராஜேஷ் படக்கென பிடுங்க அதனை சற்றும் எதிர்பாராத ஐஸ்க்ரீம் கடைக்காரர் விழி பிதுங்கி நிற்கிறார்.

ஷேர் செய்யப்பட்ட வீடியோ

ஷேர் செய்யப்பட்ட வீடியோ

பின்னர் வழக்கம் போல் சிறிது நேரம் விளையாடிவிட்டு ஐஸ்க்ரீமை ஐஸ்வர்யா ராஜேஷிடம் கொடுத்தனுப்புகிறார். இந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

முகம் மாறிவிட்டது

முகம் மாறிவிட்டது

மேலும் ட்ராவலிங்கை நான் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏமாந்ததும், ஐஸ்க்ரீம் கடைக்காரரின் முகம் எப்படி மாறிப் போய்விட்டது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

குவியும் வியூஸ்

குவியும் வியூஸ்

மேலும் க்யூட் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் எக்ஸ்பிரஷன்ஸ் அருமை என்றும் நெடிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X