“அது கட்டாயத்தால் ஏற்பட்ட காதல்”.. ஓப்பனாக பேசிய நடிகர்.. நிஜ காதலர்களை பிரித்து சதி செய்த பிக் பாஸ்

தன்னுடைய காதல் ரகசியங்களை பற்றி, நடிகர் பராஸ் சப்ரா பொதுவெளியில் பேசியது, மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகை அகன்ஷ்கா சப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் பராஸ் சப்ரா, நடிகை அகன்ஷ்கா புரி இடையேயான காதல் முறிந்துள்ளது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அதீத கவர்ச்சி, செக்ஸ் காட்சிகள் என எல்லை மீறியதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கூட எழுந்தது.

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நிஜக் காதல் முறிந்துள்ளது. பிக் பாஸ் 13ல் பங்கேற்றுள்ள நடிகர் பராஸ் சப்ராவும், நடிகை அகன்ஷ்கா புரியும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

காதல் பற்றி பராஸ்

காதல் பற்றி பராஸ்

இந்நிலையில் சில தினங்களுக்கு ஒளிபரப்பான எபிசோடில், அகன்ஷ்கா புரியுடனான காதல் கட்டாயத்தால் ஏற்பட்டது என பராஸ் கூறினார். அகன்ஷ்காவின் கையெழுத்தை தனது கையில் பச்சை குத்தியது கூட அவருடை கட்டாயத்தினால் தான் என பராஸ் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு முறை தான் காதலை முறித்து கொள்ளலாம் என கூறும் போதும், அகன்ஷ்கா அழுது புலம்பியதாகவும் அவர் கூறினார்.

அகன்ஷ்கா கோபம்

அகன்ஷ்கா கோபம்

பராஸ் சப்ராவின் இந்த பேச்சு அகன்ஷ்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், " பராஸ் கூறுவது எல்லாம் சுத்த பொய். எனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் பராஸ் என் கையெழுத்தை அவரது கையில் பச்சை குத்தினார்.

சர்ப்ரைஸ் கிப்ட்

சர்ப்ரைஸ் கிப்ட்

நான் படப்பிடிப்பில் இருந்த போது வாட்ஸ் அப் மூலம் அவர் போட்டோ அனுப்பிய போது தான் எனக்கு தெரியவந்தது. அதற்கு பதிலாக பராஸின் பெயரை நான் என் கையில் பச்சைக் குத்திக்கொண்டேன். ஆனால் இதை பற்றி பிக் பாஸ் வீட்டில் பராஸ் பேசுவார் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எனக்கு சந்தோஷம் தான்

எனக்கு சந்தோஷம் தான்

எங்களுடைய காதல் கட்டாயத்தினால் உருவானது கிடையாது. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவம் நான் வலுவான பெண். எனக்கு எந்த ஆணின் துணையின் தேவையில்லை. எங்கள் காதல் முறிந்துவிட்டது என பராஸ் கூறினால், முதலில் சந்தோஷப்படக்கூடிய நபர் நானாக தான் இருப்பேன்.

கொச்சைப்படுத்திவிட்டார்

கொச்சைப்படுத்திவிட்டார்

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நிகழ்ச்சிக்கு முன்னர் நாங்கள் இருவரும் பேசியபோது, கேமில் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்வேன் என பராஸ் கூறினார். ஆனால் எங்கள் உறவையே கொச்சைப்படுத்துவார் என நான் நினைக்கவே இல்லை.

பராஸ் வீட்டு சாவி

பராஸ் வீட்டு சாவி

இது கட்டாயத்தினால் ஏற்பட்ட உறவு என பராஸ் கூறுகிறார். அப்படி இருந்தால், அவர் ஏன் அவருடைய வீட்டு சாவி, கால், போன், வங்கி கணக்கு என எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துவிட்டு போக வேண்டும். இப்போது வரை அவருக்கு உடைகள் அனுப்புவது முதல் அனைத்து விஷயங்களையும் நான் தான் கவனித்து வருகிறேன்", என அகன்ஷ்கா கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: akanksha puri
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X