விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை!

சென்னை: நடிகர் விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக ரொம்பவே வருத்தப்படுகிறேன் என நடிகை அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay to direct Movie • Kadhai, ThiraiKadhai, Eyakkam

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார்.

மேலும் சத்யன், ஜெயராம், மனோபாலா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் ஆர்மி அதிகாரியாக புது ரோலில் நடித்திருந்தார்.

வருத்தப்படுகிறேன்

வருத்தப்படுகிறேன்

இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்த நடிகை அக்ஷரா கவுடா ஊடகம் ஒன்றிற்கு பேட்டிளித்துள்ளார். அதில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அக்ஷரா கவுடா பேட்டி

அக்ஷரா கவுடா பேட்டி

நடிகை அக்ஷரா கவுடா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் விஜயுடன் துப்பாக்கியில் நடித்தது குறித்தும் அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார்.

ஒரே நல்ல விஷயம்

ஒரே நல்ல விஷயம்

ஆரம்பம் படத்தில் நடிக்க சந்தோஷ் சிவன்தான் தனக்கு உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது‘எனக்கு துப்பாக்கி படத்தால் நடந்த ஒரே நல்ல விஷயம் தளபதி, முருகதாஸ் சார் மற்றும் சந்தோஷ் சிவன் சார் மட்டும் தான். அதைத்தவிர அந்தப் படத்தில் நான் வேறு என்ன செய்தேன்?

விளக்கம் வேறு

விளக்கம் வேறு

நான் அந்த வேடத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன், நான் காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் வேறு. நான் புதியவள், அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

துப்பாக்கி படத்தில்..

துப்பாக்கி படத்தில்..

கடினமான உணர்வுகள் எதுவும் இல்லை, இன்றும் அவர்களில் யாராவது என்னை அழைத்தால் நான் வேலை செய்வேன் என கூறியுள்ளார். துப்பாக்கி படத்தில் நடிகர் ஜெயராம் நடிகர் விஜய்க்கு அவரை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவார்.

ஷேட்ஸ் ஆஃப் கிரே

ஷேட்ஸ் ஆஃப் கிரே

பின்னர் நடிகை காஜல் அகர்வால், அவர் அடல்ட் வெப்சைட்களுக்கு வேலை பார்ப்பதாக கூறுவார். இதுதான் அக்ஷரா நடித்த ரோல், இதற்காகதான் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அக்ஷரா கவுடா ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற அடல்ட் கன்டென்ட்டில் நடித்து பெரும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X