என்னை போன்ற பெண்களுக்கு ஐட்டம் டான்ஸ்.. கிளாமர் ரோல்தான் கொடுக்குறாங்க.. விஜய் பட நடிகை வேதனை!
மும்பை: தன்னை போன்ற பெண்களுக்கு ஐட்டம் டான்ஸும் கிளாமர் ரோலும்தான் கொடுக்கிறார்கள் என விஜய் பட நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உயர்திரு 420 படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான பிறகுதான் அவருக்கு இந்தி உட்பட மற்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடல்ட் வெப் சைட்
தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம், விஜயின் துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜெயம் ரவியின் போகன் படத்தில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் துள்ளல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக நடித்தார். ஏற்கனவே ஒரு முறை பேட்டி ஒன்றில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்த கதாப்பாத்திரத்திற்காக வருத்தப்படுவதாக கூறினார். துப்பாக்கி படத்தில் அக்ஷரா கவுடா அடல்ட் வெப் சைட் நடிகையாக நடித்திருப்பார்.

ரொம்ப கஷ்டம்
இந்நிலையில் தற்போது மீண்டும் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை அக்ஷரா கவுடா, பல்வேறு விஷயங்கனை மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, லாக்டவுன் நேரத்தில் வேலையில்லாம சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம்.

சூர்ப்பனகை படம்
நான் வீட்டை சுத்தம் செய்தேன், உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன், இறுதியாக, ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, ஒரு போட்டோஷூட் செய்தேன். இவ்வளவு நாள் கழித்து கேமராவை எதிர்கொண்டது நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார். தற்போது ரெஜினா கெசன்ட்ரா லீடிங் ரோலில் நடிக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வரும் அக்ஷரா கவுடா அந்தப் படம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிந்துள்ளார்.

நாங்கள் நம்புகிறோம்
அதாவது, "என் கதாபாத்திரமும் தற்போதைய மற்றும் கடந்த கால பகுதிகளில் வருகிறது. கடந்தகால வாழ்க்கையிலும், கர்மாவிலும், அது உங்கள் தற்போதைய வாழ்க்கையில் எவ்வாறு உங்களைப் பிடிக்கும் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.

படத்தை பார்க்க வேண்டும்
எனது கதாபாத்திரத்திற்கும் ரெஜினா நடித்த கதாபாத்திரத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்னால் இருக்கிறோம், ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதனை கண்டுபிடிக்க நீங்கள் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணியாற்றுவதில் மகிழ்ச்சி
தொடர்ந்து நடிகை ரெஜினாவை பாராட்டிய அக்ஷரா கவுடா, "ரெஜினாவும் நானும் படப்பிடிப்பின் மூலம் நல்ல நண்பர்களாகிவிட்டோம். நான் பணியாற்றிய சிறந்த இணை நடிகர் அவர். எவாரு படத்தில் அவரது நடிப்பை நான் மிகவும் விரும்பினேன், அவருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

நாங்கள் நம்புகிறோம்
வெண்ணிலா கிஷோர் கூட நிறைய இன்புட்ஸ்களை வழங்கினார். எனக்கு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு உள்ளது, குறைந்தபட்சம் அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்ற அக்ஷரா படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.

ஐட்டம் டான்ஸ்
மேலும் பேசிய அவர் நான் எத்தனை படங்கள் செய்தாலும், நான் எப்போதும் ஆரம்பம் நடிகை அல்லது ஸ்டைலிஷ் தமிழச்சி பெண் என்று அழைக்கப்படுகிறேன். என்னைப் போன்ற பெண்களுக்கு எப்போதும் கவர்ச்சியான பாத்திரங்கள் அல்லது ஐட்டம் டான்ஸ் மட்டுமே வழங்கப்படுகின்றன.

விரைவில் தொடங்கும்
ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு நடிக்க வாய்ப்பளிக்கிறது, கார்த்திக் என் மீது அந்த நம்பிக்கையை வைத்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. இந்த படம் எனக்கு விஷயங்களை மாற்றும் என்று நான் நம்புகிறேன். தற்போது இரண்டு படங்கள் உள்ளன, ஆனால் அவை எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியாது. எல்லோரையும் போலவே விரைவில் ஷுட்டிங் தொடங்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம் என கூறியுள்ளார் அக்ஷரா கவுடா.


Click it and Unblock the Notifications











