Akshara haasan: நடிப்பில் அப்பா கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்.. பர்த்டே பேபி அக்ஷரா சுவாரஸ்யம்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் 70 வயதிலும் சிறப்பான பல விஷயங்களை செய்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் காட்டி வருகிறார்.

அவரது அடுத்தடுத்த படங்கள் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் பிரபாசுக்கு வில்லனாக கல்கி படத்திலும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

Actress Akshara haasan celebrates her birthday today and opens up about her father

நடிகை அக்ஷரா ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர் கமல்ஹாசன் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ஸ்கிரிப்ட் ரைட்டர், அரசியல்வாதி என பன்முகம் காட்டி வருகிறார். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு ரசிகர்களுக்கு உத்வேகமாக அமைந்து வருகிறது. கடந்த ஆண்டில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்து இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து வருகிறார் கமல்.

கமல்ஹாசனின் படங்களை பார்த்து, உத்வேகமடைந்து நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் அவரது வாரிசுகளாக தங்களை கூறிக் கொள்பவர்களை அதிகமாக பார்க்க முடிகிறது. ஆனால் அவரது இரு மகள்களும் திரைத்துறையில்தான் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசன், இந்திய அளவில் அதிகமான படங்களில் நடித்து வரும்நிலையில், இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் திரையில் நடிகையாக நடித்து வருகிறார்.

இன்றைய தினம் பிறந்தநாளை காணும் நடிகை அக்ஷரா ஹாசனும் தன்னுடைய தந்தை போலவே, நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் திறமையை காட்டி வருகிறார். நடிகர்கள் தனுஷ், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த, ஷமிதாப் படத்தின்மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் அக்ஷரா ஹாசன். தொடர்ந்து, விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ள அக்ஷரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Actress Akshara haasan celebrates her birthday today and opens up about her father

அவர் முன்னதாக கொடுத்திருந்த பேட்டியொன்றில் தன்னுடைய படங்களுக்காக அப்பா எந்தவிதமான ஆலோசனைகளையும் வழங்க மாட்டார் என்றும் ஆனால் அவரது தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்திற்காக அவர் சில காட்சிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தயாரிப்பாளராக அவர் எடுத்துக் கொண்ட அக்கறையாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் நடிக்க போகிறேன் என்று தான் தன்னுடைய அப்பாவிடம் கூறியபொழுது அவர் சில அறிவுரைகளை கொடுத்ததாக அக்ஷரா தன்னுடைய பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதல் படமாக நடத்தாலும் பத்தாவது படத்தில் நடித்தாலும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அப்பா அறிவுரை கொடுத்ததாகவும், ஒவ்வொரு படத்திலும் முதல் படத்திற்கான அர்ப்பணிப்பு, உழைப்பை கொடுக்க அறிவுறுத்தியதாகவும் அக்ஷரா குறிப்பிட்டுள்ளார்.

Actress Akshara haasan celebrates her birthday today and opens up about her father

இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ள அக்ஷரா, அதிகமாக இணையத் தொடர்களில் நடிப்பது தனக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் அதிகமான படங்களில் கமிட்டாக முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கமல் மற்றும் ரஜினியை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கவும் அக்ஷரா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான கதையையும் அவர் தயாரித்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X