சிலர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: உருக்கமாக பதிவிட்ட நடிகை அக்‌ஷரா ஹாசன்!

சிலர் குறுகிய மனப்பான்மையோடு செயல்படுவதாக அக்‌ஷரா கூறியுள்ளார்

Recommended Video

குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: நடிகை அக்‌ஷரா ஹாசன்!

சென்னை: குறுகிய மனப்பான்மையுடன் சிலர் செயல்படுவது வருத்தமளிக்கிறது என அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை அக்‌ஷரா ஹாசன் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இக்யக்கத்தில் விக்ரம் நடிக்கும் காடம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Actress Akshara Haasan painful statement!

இது தொடர்பாக உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை யார் எதற்காக செய்தார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, சில குறுகிய மனப்பான்மையுடையவர்களால், துரதிஷ்டவசமாக ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனம் பெறவேண்டும் என்பதற்காக அது கவரக்கூடிய தலைப்புடன் பகிரப்படும் போது, இன்னும் அதிக பயத்தை உண்டாக்குகிறது.

மீடூ போன்ற இயக்கங்களால் பெண்கள் தன்னெழுச்சியோடு எழும்போது இவ்வாறு நடக்கிறதென்பது மிகவும் வேதனையாக உள்ளது. தங்களின் சந்தோஷத்திற்காக ஒரு இளம்பெண்ணை தூன்புறுத்தி அதை பொதுவெளியில் பகிரும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் எனக் காட்டுகிறது.

என்னுடைய புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நான் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளேன். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை, நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். நாம் எல்லோரும் சுதந்திரமாகவும், ஒழுக்கமாகவும் வாழவும் வாழவிடவும் கற்றுக்கொண்டிருக்கிறோம், அதனால் இணையதள துன்புறுத்தல் தொடராது என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X