'பீரியட்ஸ்' அபிஷ்டு இல்ல.. பார்வை தான் தப்பா இருக்கு.. அக்ஷரா ஹாசன் பேட்டி!

சென்னை: நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சரிகாவின் மகள்கள், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இருவரும் அப்பா, அம்மா போலவே சினிமாவில் கலக்கி வருகின்றனர். அண்மையில் அக்ஷரா ஹாசன் அளித்துள்ள பேட்டியில், 'பீரியட்ஸ்' குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

நடிப்பின் நாயகன், உலக நாயகன் இப்படி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடியவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பு, இயக்கம், பாட்டு, டான்ஸ், தயாரிப்பு என எதுவாக இருந்தாலும், அதில் தனது தனித்துவத்தை புகுத்திவிடுவார். கமலஹாசனுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Akshara Haasan Kamal interview

பீரியட்ஸ்: நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படம் மூலம் நடிகையான இவர், அடுத்து, விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அக்னி சிறகுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், 'பீரியட்ஸ்' பற்றி பொது இடத்தில் பெண்கள் பேசவே தயங்குகிறார்கள். 'பீரியட்ஸ்' அபிஷ்டு இல்ல, அது ஒரு சாதாரண விஷயம். இதன் மூலமாகத்தான் இந்த உலகத்திற்கு ஒரு உயிர் வருகிறது.

ஆனால், இதை சிலர் தீட்டு என்று சொல்லுகிறார்கள். இதில் இருக்கும் நல்லதைத்தான் நாம் பார்க்க வேண்டும். பார்ப்பவர்களின் பார்வை தப்பாக உள்ளது. அவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என்று தான் சொல்லுவேன் என்றார்.

வருத்தப்பட்டோம்: தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய அப்பா அம்மா பிரிந்த போது, அதை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. மற்ற பசங்களைப்போல, நாங்களும் பீல் பண்ணோம். ஆனால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று எங்களுக்குள்ளே நானும் என் அக்காவும் மனதை தேற்றிக்கொண்டோம். என்னுடைய அப்பா அம்மா இல்லாத ஒரு கவலையை போக்கியவர் என்னுடைய அக்கா தான் என்று அக்ஷரா ஹாசன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X