அப்போ புலி படத்துல யாரு புலி... யாளி பட விழாவில் விஜய்யை கலாய்த்த நடிகை
Recommended Video

சென்னை: புலி படத்தில் யாரு புலி? என கேட்டு நடிகர் விஜய்யை, நடிகை அக்ஷயா கிண்டல் செய்துள்ளார்.
கலாபக் காதலன் படப் புகழ் அக்ஷயாவின் கணவர் தயாரித்து உருவாக்கியுள்ள படம் யாளி. இதில் அக்ஷயாதான் நாயகியாக நடிக்கிறார். தமன் ஹீரோவாக அறிமுகமாகிறார். யாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு போஸ்டரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அக்ஷயா பதில் அளித்தார். அப்போது, 'யாளி' என்றால் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், ' யாளி என்பது இந்து கோயில்களில் இருக்கும் ஒரு ஆக்ரோஷமான காவல் தெய்வம். சிங்க முகம், யானை தந்தம், குதிரை உடல் என அதன் வடிவம் இருக்கும்' என்று கூறினார்.
யாளிக்கும் உங்கள் படத்துக்கும் என்ன சம்மந்தம் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நேரடியாக பதில் அளிக்காத அக்ஷயா, " புலி படத்தில் யாரு புலி?" என நிருபர்களை பார்த்து பதில் கேள்வி கேட்டார். இதனால் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
விஜய் தான் அந்த படத்தில் புலி என செய்தியாளர்கள் பதில் அளித்தனர். பிறகு பேசிய அக்ஷயா, "அதேபோல் இந்த படத்தின் கதாநாயகி ஜனனி தான் 'யாளி'" என்று சிரித்தபடி விளக்கமளித்தார்.
படத்தின் தலைப்பை பற்றி கேள்வி கேட்டதற்கு, நடிகர் விஜய் படத்தை குறிப்பிட்டு அக்ஷயா பதில் சொல்வார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications











