எது சுதந்திரம்? கல்கத்தா மருத்துவ மாணவியின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் நடிகைகள்
கொல்கத்தா: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த பேச்சுகள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுதான். தொடக்கத்தில் இந்த கொலை, தற்கொலை என சொல்லப்பட்ட நிலையில், சக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தின் அடிப்படையில் காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் கொலை என அறிவித்தது.
இவ்வாறாக முன்னுக்குப் பின் முரணாக ஆரம்பத்தில் இருந்தே இந்த பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தகவல்கள் காவல்துறை தரப்பில் இருந்தும் மருத்துவக் கல்லூரி தரப்பில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மேற்கு வங்க காவல்துறையின் விசாரணை திருப்தியாக இல்லை எனக் கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பினை பயின்று வந்த பயிற்சி மருத்துவ மாணவி கடந்த 9ஆம் தேதி காலையில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இப்படியான நிலையில், மருத்துவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எனவும், அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் அதிகப்படியாக வெளியேறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் கண்களில் இருந்தும் ரத்தம் வெளியேறியுள்ளது. மாணவியின் கழுத்து உடைக்கப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனை ரிப்போர்ட் அனைவரையும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

150 கிராம் விந்தணு: இதுமட்டும் இல்லாமல், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலில் இருந்து சுமார் 150 கிராம் விந்தணு சேகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இன்னும் சொல்லப்போனால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறிவருகின்றனர். இந்த பாலியல் வன்கொடுமை படுகொலைக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு போராட்டக்கார்கள் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நிர்பயா: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட நடிகைகள் பலரும் தங்களது கண்டனங்களையும் அதிர்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாவில், " மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. பெண்கள் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்பதை உணரும் மற்றொரு நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது, நாடு தழுவிய கூக்குரல் மற்றும் அதைத் தொடர்ந்து சட்ட சீர்திருத்தங்கள் நடந்தது. ஆனால் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை.

90 பாலியல் வல்லுறவுகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2022 அறிக்கையின் படி, இந்தியாவின் 30% மருத்துவர்களும், 80% நர்சிங் ஊழியர்களும் பெண்களாக இருப்பதால், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. 2022 முதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரித்துள்ளன, இவற்றில் 20% க்கும் அதிகமான பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய கொடூரமானவை. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவாகியுள்ளன.
முன்னுரிமை: பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களை உருவாக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் வேண்டும். இத்தகைய வன்முறையை உருவாக்கும் சமூகக் கட்டமைப்பின் அடிப்படை காரணங்களைக் கண்டுபிடித்து தீர்க்காத வரை, எதுவும் மாறாது. மேலும், பெண்களை தங்கள் பாதையை மாற்றச் சொல்லாதீர்கள்- நமது நாட்டைத் திருத்துங்கள். ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். ஆலியா பட்டின் இந்த பதிவை நடிகை மஞ்சு வாரியர் ஷேர் செய்துள்ளார்.
என்ன மாதிரியான நாடு: அதேபோல் நடிகை த்ரிஷா மற்றும் மிர்ணாள் தாக்கூர் தங்களது கண்டணங்களை பதிவிட்டுள்ளனர். மிர்ணாள் தாக்கூர் தனது பதிவில், நாம் என்ன மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்" என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் நடிகை ரோஷினி ஹரி பாண்டியன் தனது பதிவில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது ஒரு பெண்ணை அல்ல, இந்த நாட்டின் நம்பிக்கையை என பதிவிட்டுள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் காட்டமாக எழுதியுள்ளார்.
உண்மையான சுதந்திரமா? ராஷ்மிகா மந்தனா தனது பதிவில், " பெண்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றால் அது அவர்களின் பாதுகாப்புதான். எங்களுக்கு அதனை எப்படி பெறுவது எனத் தெரியவில்லை. எப்படி உடை உடுத்தவேண்டும், என்னமாதிரியான உடை உடுத்த வேண்டும், எப்போது வீட்டில் இருந்து வெளியேறவேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், கோபமே வந்தாலும் அதனை எந்த அளவிற்கு வெளிக்காட்ட வேண்டும், நாங்கள் எங்கே சிறுநீர் கழிக்க வேண்டும் , எங்கே தூங்கவேண்டும் என்பதை நாங்கள் எப்போது சுதந்திரமாக தீர்மானிக்கும் காலம் வரும் எனத் தெரியவில்லை" என காட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை நிவேதா பெதுராஜ்," இதுதான் உண்மையான சுதந்திரமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











