நடிகை அல்போன்சாவின் காதலர் தற்கொலை- தற்கொலைக்கு அல்போன்சா முயற்சி

பாட்ஷா படம் மூலம் குத்தாட்ட நடிகையாக அறிமுகமானவர் அல்போன்சா. தொடர்ந்து பல படங்களில் டான்ஸ் ஆடியுள்ளார். பின்னர் இவர் நடனத்தை நிறுத்தி விட்டார். தான் காதலித்து வந்த வினோத்குமாருடன் என்பவருடன் சேர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அல்போன்சாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், வினோத்குமார் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதும் அல்போன்சாவும் ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அல்போன்சாவின் காதலர் தற்கொலை,அல்போன்சாவின் தற்கொலை முயற்சி ஆகியவற்றால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்போன்சாவின் உடன் பிறந்த தம்பிதான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











