ரேஸூக்கு யார் வரீங்க... ஆலியா மானசாவின் வைரல் வீடியோ !

சென்னை : ராஜா ராணி புகழ் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் , பலரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

செம்பா

செம்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா . இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருப்பார் ஆலியா. அதுவும் , சின்னையா... சின்னையா... என்று கூறி குடும்ப தலைவிகளின் இதயத்தை கொள்ளையடித்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அனைவரும் விரும்பி பார்க்கும் தொடரானது. அதுவும் அந்த சீரியலில் கார்த்திக் , செம்பா கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்து ரசித்து பார்த்தனர். இந்த தொடரில் நடிக்கும் போதே ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முதல் பிறந்தநாள்

முதல் பிறந்தநாள்

ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்த இந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இந்த தம்பதி இணையத்தில் பதிவிட்டு இருந்தனர் .

Recommended Video

Alya Manasa Reveals her Baby photo | Alya Manasa Sanjeev
பிஸியாக நடித்து வருகிறார்

பிஸியாக நடித்து வருகிறார்

குழந்தை பிறந்ததை அடுத்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆலியா, மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

பைக் ஓட்டும் ஆலியா

பைக் ஓட்டும் ஆலியா

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக உங்கள் ஆற்றல் முழுவதையும் பழையதை எதித்து போராடுவது அல்ல, புதியதை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X