கிளம்பு கிளம்பு அந்து போச்சு… புடவையில் தாறுமாறா ஆட்டம் போட்ட மானசா!
சென்னை : ராஜா ராணி புகழ் ஆலியா மானசா காலா படத்தில் வரும் கிளம்பு கிளம்பு அந்து போச்சு பாடலுக்கு நடு ரோட்டில் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை குவித்து வருகிறது.
மானசாவின் ரசிகர்கள் என்ன மானசா, ஆட்டம் பலமா இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.

செம்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா . இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருப்பார் ஆலியா. அதுவும் , சின்னையா... சின்னையா... என்று கூறி குடும்ப தலைவிகளின் இதயத்தை கொள்ளையடித்தார்.

காதல் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அனைவரும் விரும்பி பார்க்கும் தொடரானது. அதுவும் அந்த சீரியலில் கார்த்திக் , செம்பா கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்து ரசித்து பார்த்தனர். இந்த தொடரில் நடிக்கும் போதே ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பிஸியாக நடித்து வருகிறார்
குழந்தை பிறந்ததை அடுத்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆலியா, மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

செம ஆட்டம்
பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மானசா சமீபத்தில் பைக் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். தற்போது தனது இன்ஸ்டா ரீலில் காலா திரைப்படத்தில் வரும் கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு என்ற பாட்டுக்கு நடு ரோட்டில் சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். ராஜா ராணி சீரியலில் நடிக்கும் விஜே பிரதுவுடன் இவர் ஆடிய ஆட்டம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











