Alya Manasa :பிறந்தநாளுக்கு இனியா டீமிற்கு பிரியாணி விருந்து வைத்த ஆல்யா மானசா.. கொண்டாட்டம்தான்!
சென்னை : விஜய் டிவியின் ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஆல்யா மானசா.
இவர் தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக விஜய் டிவி சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் அவர் விஜய் டிவி சீரியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சன் டிவியின் இனியா சீரியலில் தற்போது லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக அமைந்தது.

ஆல்யா மானசா கொடுத்த பிறந்தநாள் விருந்து :
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஆல்யா மானசா. இந்தத் தொடர் அவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் அதிகமான பிரபலத்தையும் கொடுத்துள்ளது. இந்தத் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை அவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டது. முன்னதாக மாடலிங் செய்யும்போதே, சஞ்சீவை பார்த்து தான் சைட் அடித்ததாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.
ராஜா ராணி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே இருவருக்கும் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டன. இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக ராஜா ராணி தொடரிலிருந்து ஆல்யா மானசா விலகிறார். குழந்தை பிறந்தவுடன் மீண்டும் விஜய் டிவி சீரியலில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சன் டிவியின் இனியா தொடரில் கமிட்டாகி லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரில் தன்னுடைய தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவராக இனியா காணப்படுகிறார். அவருடைய உடல்நலப் பிரச்சினை குறித்து கணவர் விக்ரமிற்கு தெரியவருகிறது. இதைத் தொடர்ந்து அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதாக கதைக்களம் செல்லவுள்ளது. இந்தத் தொடர் தற்போது 150 எபிசோட்களை கடக்கும் முன்னதாகவே, சேனலின் டிஆர்பியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விரைவில் முதலிடத்தில் இருக்கும் கயல் தொடரை இந்தத் தொடர் முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்யா மானசாவை அடுத்தடுத்த சீரியல்களில் புக் செய்ய, சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆல்யா மானசா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி, தன்னுடைய கணவர் மற்றும் இனியா படக்குழுவினருடன் இணைந்து அவர் பார்ட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் இனியா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
இதனிடையே இந்த விருந்தை ஏற்பாடு செய்த தன்னுடைய கணவர் சஞ்சீவிற்கும் அவர் நன்றி தெரிவத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அழகான பந்தல் போடப்பட்டு, அனைவரையும் உட்கார செய்து, தன்னுடைய கைகளாலேயே ஆல்யா மானசா பரிமாறியது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அவருடைய வழக்கமான சிரிப்பிற்கிடையில் பந்தி பரிமாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











