பொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் மேலும் இரண்டு நடிகைகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் பிரமாண்டமாக உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

இந்தப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
படத்தில் ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளது. ஆனாலும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து உறுதியாக தெரியவரும்.

அமலா பால்?

அமலா பால்?

கதையில் 60க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து நீக்கம்

அடுத்தடுத்து நீக்கம்

நடிகை அமலா பால் நடிப்பில் ஆடை திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்தார். இது பெரும் சர்ச்சையானது. இதனால் விஜய் சேதுபதியின் படம் உட்பட பல படங்களில் இருந்து அடுத்தடுத்து அமலா பால் நீக்கப்பட்டார்.

என்ன கேரக்டர்

என்ன கேரக்டர்

இந்நிலையில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அமலா பால் நடிக்கவுள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அமலா பால் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X