The Goat life: தி கோட் லைஃப் இசை வெளியீடு.. கணவருடன் பங்கேற்ற அமலா பால்!
அங்கமாலி: பிரித்திவிராஜ் சுகுமாரன், அமலா பால் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தி கோட் லைஃப். இந்த படத்தின் ரிலீஸ் இம்மாதம் 28ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிரபலமான நாவலாசிரியர் பென் யாமின் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல தேசிய விருது இயக்குனர் பிளெஸ்சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை கடந்த 10 ஆண்டுகளாக அவர் உருவாக்கி வந்துள்ளார்.
படம் ரிலீசுக்கு முன்னதாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் கேரளாவின் அங்கமாலியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்பான வகையில் நடைபெற்றது. இதில் நடிகை அமலா பால் தன்னுடைய கணவருடன் இணைந்து பங்கேற்றார். இருவரும் வெள்ளை நிற உடையில் மிகச்சிறப்பாக காணப்பட்டனர்.

ஆடு ஜீவிதம் படம்: நடிகர் பிரித்திவிராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரனுடன் தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் பிளெஸ்சி இந்த படத்தில் இணைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் படத்தின் உருவாக்கத்தில் அவர் ஈடுபட்ட நிலையில் தற்போது படம் முழுமையாக உருவாகி இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான நாவலான ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா படம்: இந்த நாவல் 12 பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் பென் யாமின் எழுதிய இந்த நாவல் கேரளாவில் இருந்து வெளிநாட்டில் பிழைப்பை தேடி இடம் பெயரும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஸ்ரீதர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கேரளாவின் அங்கமாலியில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
கணவருடன் பங்கேற்ற அமலா பால்: இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாயுடன் இணைந்து பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் ஒன்றாக இவர்களது வருகை இருந்தது. நிகழ்ச்சியில் வெள்ளை நிற உடையில் இருவருமே தகதகவென ஜொலித்தனர். தன்னுடைய கணவருடன் கலகலப்பாக பேசி சிரித்தபடி இந்த நிகழ்ச்சியில் அமலாபால் வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. அவர் தன்னுடைய கர்ப்பத்தை சமீபத்தில் அறிவித்த நிலையில், அவரது முகம் ஜொலிஜொலிப்பாக இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஜொலிஜொலித்த அமலா பால்: கடந்த ஆண்டில் தன்னுடைய நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துக் கொண்ட அமலா பால், இரண்டு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக உள்ளதாகவும் அறிவித்தார். இந்நிலையில் பிரித்திவிராஜ் சுகுமாரனுடன் அவர் இணைந்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் அவருக்கான ரீஎன்ட்ரியை கொடுக்கும் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் அமலா பால் மீண்டும் இணைந்து நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலரிலும் அமலா பால் சிறப்பாக காணப்பட்டார்.


Click it and Unblock the Notifications











