Amala paul : போலோ இந்தி படத்தில் நடிக்க அமலா பால் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மும்பை : நடிகை அமலா பால் தென்னிந்திய மொழிப்படங்களில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

தற்போது தமிழில் அமலா பாலுக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Amala paul gets small amount of remuneration for Ajay devgans Bholaa movie

சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் அமலா பால், திரைப்படங்களிலும் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து வருகிறார்.

போலோ படத்தில் அமலா பாலின் சம்பளம் : நடிகை அமலா பால் தென்னிந்திய மொழிப் படங்களில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே அதிரடியாக நடித்து கவனத்தை பெற்றவர். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான மைனா, தெய்த்திருமகள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்கள். இந்தப் படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு வலம் வந்தார் அமலா பால்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் சில வருடங்கள்கூட நீடிக்கவில்லை. தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். ஆடை போன்ற படங்களில் நடித்து அதிகமான ரசிகர்களை ஈர்த்த அமலா பால், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். ஆனால் அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

சமீபத்தில் பிரித்விராஜுடன் இணைந்து ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அதிரடியாக முத்தக்காட்சியில் நடித்து ரகிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த காட்சி அதிகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் கைதி படத்தின் ரீமேக்கான போலோ படத்தில் நடித்து சமீபத்தில் இந்தப் படம் ரிலீசானது. படம் தமிழில் பெற்ற அளவிற்கு சிறப்பான விமர்சனங்களை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக வெறுமனே 25 லட்சம் ரூபாய் மட்டுமே அமலா சம்பளமாக பெற்றுள்ளாராம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான ஹீரோயினாக வலம்வந்த அவர், பட வாய்ப்புகளை ஈர்க்கும்வகையில் அதிகமான கவர்ச்சிக் காட்டவும் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராகியுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் பட வாய்ப்புகளை அதிகமாக பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Actress Amala paul gets small amount of remuneration for Ajay devgans Bholaa movie

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அமலா பால். அதிக கவர்ச்சியுடன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மாலத்தீவு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், படங்களிலும் தாராளம் காட்ட அவர் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X