Amala paul: லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழில் அமலா பால்… கசமுசா காட்சிக்கு ஓகே.. சம்பளம் வந்தா போதும்!
சென்னை: தமிழில் உருவாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் அமலா பால் கியாரா அத்வானி கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகிய நான்கு பேர் இயக்கிய நான்கு குறும்படங்களின் தொகுப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி கதையாக வெளியாகி வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக கரண் ஜோஹாரின் குறும்படத்தில் கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவித்த காட்சி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
லஸ்ட் ஸ்டோரீஸ்: கியாரா அத்வானி நடித்த குறும்படத்தை கரண் ஜோஹர் இயக்கி இருந்தார். இதில், கியாராவின் கணவராக விக்கி கௌஷல் நடித்திருந்தார். அவரால் தன் மனைவியின் அந்த ஆசையை சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், கியாரா கருவியை பயன்படுத்தி சுய இன்பம் அனுபவிப்பார். ஆனால் அந்த காட்சியை குடும்பத்தினர் பார்த்துவிடுவார்கள். இந்த காட்சியில் கியாராவின் நடிப்பு இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியானது. முதல் பாகத்தைப் போல லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தையும் 4 பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான பால்கி, கொன்கனா சென் ஷர்மா, சுஜய் கோஷ் மற்றும் அமித் ஷர்மா இயக்கி உள்ளனர். இதில், தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர், திலோத்தமா சோமே, அம்ருதா சுபாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், இது முதல் பாகத்தைப்போல சிறப்பாக இல்லாமல் சுமாராகவே இருந்தது.

தமிழில் அமலா பால்: இந்நிலையில், நடிகை அமலா பால் தமிழில் உருவாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் கியாரா அத்வானி நடித்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தால், சினிமாவில் காணாமல் போன அமலா பால், மீண்டும் வைப்ரேட்டர் பயன்படுத்தும் கசமுசா காட்சியில் நடித்து பெயரை கொடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் அறிவுரை கூறினாலும், சம்பளம் வந்தால் போதும் என்று இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால்,இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











