நான் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட்.. அமலாபால் வெளியிட்ட சோகமான போட்டோக்கள் !

சென்னை : தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள அமலாபால் தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

ஆடை படத்தை தொடர்ந்து இவரின் அதோ அந்த பறவை போல படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில்.. இப்போது சோகமாக உள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் சூடேற்றும் பிகினி படங்களை பகிர்ந்து வந்த அமலாபால் தற்போதுநான் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் என சொல்லி சோகமான போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார்.

திருமணத்தில் முடிந்தது

திருமணத்தில் முடிந்தது

தலைவா படத்தில் விஜய்யுடன் இவர் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தை இயக்கிய எ எல் விஜய்க்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு அந்த காதல் 2014ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில் கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வந்தார்.

ஹாட்டான புகைப்படம்

ஹாட்டான புகைப்படம்

இந்நிலையில் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் பட பிடிப்புகள் ஏதும் நடைபெறாததால் வீட்டில் இருக்கும் நேரத்தில் விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகிறார். இவ்வாறு சில நாட்களுக்கு முன்பு வேஷ்டி மற்றும் ஷர்ட் அணிந்தும் கலக்கலாவும், அந்தரத்தில் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த நிலையில் இப்போது கன்னத்தில் கை வைத்தபடி வெளியிட்டுள்ள அப்பாவித்தனமான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நல்ல வரவேற்பை

நல்ல வரவேற்பை

ஆடை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளிலும் ஆடையில்லாத காட்சிகளிலும் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த இவர் இந்த படத்தை தொடர்ந்து நடித்து வரும் படம் அதோ அந்த பறவை போல இதை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையில் வெளியிடப்படுமா இல்லை பொன்மகள் வந்தாள் மற்றும் பெண்குயின் போல OTT ல் வெளியிடப்படுமா என்ற கேள்விகள் நம்முள் எழுந்து வருகிறது.

அப்பாவித்தனமான

அப்பாவித்தனமான

அமலாபால் தற்போது கன்னத்தில் கை வைத்தபடி சோகமாகவும் அப்பாவித்தனமாகவும் இருக்கும் போட்டோகளை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோகளை பார்த்த பலரும் அமலாபாலுக்கு என்னாச்சு என துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த பதிவின் கீழ்" என்னுடைய அதிர்வுகள் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வேர்ட், மன நிம்மதியுடன் அமைதியாக இருக்கிறேன்" என்றவாறு ஏதோ ஒன்றை மறைமுகமாக சொல்லி பதிவிட்டிருக்கிறார்.

குயூட்னஸ் ஓவர்லோடட்

குயூட்னஸ் ஓவர்லோடட்

இந்த பதிவிற்கு நடிகர் ஜிசின்ஸ் அமலாபாலை பாராட்டும் விதமாக க்யூட்னஸ் ஓவர்லோடட் என சொல்லி இருந்தார் அதற்கு அமலாபால் முத்தம் கொடுக்கும் ஸ்மைலியை பதிலாக கொடுத்திருக்கிறார். மேலும் இதில் சுவாரசியமான ரசிகர் ஒருவர் அமலாபாலை கல்யாணம் செய்துகொள்ளும் படியும் அல்லது டேட்டிங் வரும்படியும் கெஞ்சி கேட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X