இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் பஞ்சகர்மா சிகிச்சையில் உள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!

நடிகை அமலா பால் ஆடை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கமிட்டாகவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதோடு அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படத்தை கூட யாரும் ரிலீஸ் செய்ய முன்வரவில்லை. காரணம் அவர் நடித்த ஆடை படம்தான்.

விவாகரத்து

விவாகரத்து

ஆடை படத்தில் அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்திருந்ததே இதற்கு காரணம். முதல் கணவரான இயக்குநர் ஏஎல் விஜயயை விவாகரத்து செய்த அமலா பால் சில ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரான பாவ்னீந்தர் சிங்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அப்டேட்டுகள்

அப்டேட்டுகள்

தன்னுடைய அன்றாட அப்டேட்டுகளையும் நடிகை அமலா பால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாட்டமாய் இருக்கும் போட்டோக்கள், தன்னுடைய தனிப்பட்ட போட்டோக்கள், தன்னுடைய குடும்ப போட்டோக்கள் என ஷேர் செய்து வருகிறார்.

மிரர் முன்பு செல்பி

மிரர் முன்பு செல்பி

அந்த வகையில் அண்மையில் தனது தாய் தந்தை மற்றும் சகோதரருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக கேப்ஷன் கொடுத்திருந்தார். தொடர்ந்து மிரர் முன்பு செல்பி போட்டோக்களை எடுத்து கலக்கலாய் ஷேர் செய்திருந்தார்.

மேலும் ஒரு போட்டோ

மேலும் ஒரு போட்டோ

மேலும் தற்போது ஓஷோ புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதாக கூறி பூக்களை ரசிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தொப்புள் தெரிய

தொப்புள் தெரிய

அதோடு தற்போது பஞ்சகர்மா சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்துள்ள அமலா பால் தலையில் சொட்ட சொட்ட எண்ணெய் வைத்துள்ளார். அதில் பச்சை நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற பிட்டு துணி போன்ற டாப்ஸை அணிந்துள்ளார். இதில் அவரது தொப்புள் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

இந்த போட்டோவுக்கு என் அன்பான ஃபேமிலி, எனது புரஃபைல்தான் என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னைப் பற்றிய சிறந்த பதிப்பாக மாறுவதற்கான எனது முடிவற்ற பயணத்தில், பஞ்சகர்மா என்று அழைக்கப்படும் ஒரு குணப்படுத்தும் செயல்முறைக்கு நான் பதிவு செய்திருந்தேன்.

மறுமலர்ச்சியின் கதை

மறுமலர்ச்சியின் கதை

நமது வேகமான வாழ்க்கையிலும் மேற்கத்திய தாக்கத்திலும் நம் முன்னோர்களின் பொக்கிஷங்களை நாம் எப்போதாவது மதிக்கிறோம். அவை நடைமுறைக்கு வர காத்திருக்கும் தகவல்களின் தங்க சுரங்கத்தை விட்டுச் சென்றுள்ளன. இந்த சிகிச்சை ஒரு முழுமையான உருமாற்றம், சுத்திகரிப்பு மற்றும் மறுமலர்ச்சியின் கதை.

20வது நாளில் நான்

20வது நாளில் நான்

இந்த செயல்முறையைச் செய்வதற்கு அபரிமிதமான சுய கட்டுப்பாடு மற்றும் வலிமை தேவை, மனம் செய்யக்கூடிய விஷயங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். எனது அனுபவத்துடன் உங்களை அழைத்துச் செல்லும்போது அடுத்த சில நாட்களுக்கு என்னைப் பின்தொடரவும்.
ஃப்ரேம்: எனது 28 நாள் பஞ்சகர்மா அனுபவத்தின் 20 வது நாளில் நான்! இவ்வாறு அந்த போட்டோவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பழைய இட்லி துணி

பழைய இட்லி துணி

ஆனால் அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர். குறிப்பாக அவர் அணிந்திருக்கும் டாப்ஸை பார்த்த நெட்டிசன்கள் அது இட்லி துணி போன்று இருப்பதாகவும், ரொம்பவே பழைய இட்லி துணி போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

துண்டுத் துணியா?

துண்டுத் துணியா?

இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் உடுத்தியிருக்கும் டாப்ஸ் உங்களின் பெட் ஷீட்டை போன்று உள்ளது. அது பெட் ஷீட்டின் துண்டுத் துணியா என்றும் கேட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த பஞ்சகர்மா சிகிச்சையின் மூலம் நீங்கள் ரொம்பவே செக்ஸியாகிவிட்டீர்கள் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X