ரசிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆடைப் பட நாயகி.. திடீரென தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை அமலா பால் ரசிகர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார். அடுக்கடுக்காக வெற்றிப்படங்களை கொடுத்த அமலா பால், கடந்த ஆண்டு ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
அந்தப் படத்தில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் நடித்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதன் காரணமாக கமிட்டான படங்களில் இருந்தும் தொடர்ச்சியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இரண்டாவது திருமணம்
வெப் சீரிஸ்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் அமலா பால். ஏற்கனவே இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்த அமலா பால் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரான பாவ்னீந்தர் சிங்கை காதலித்து திருமணம் செய்தார்.

வேலையில்லா பட்டதாரி 2
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அமலா பாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ அது.

கட்டியணைத்து முத்தம்
அப்போது ரசிகர் ஒருவர், வேலையில்லா பட்டதாரி 2 படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று பேசுகிறார். எனக்கு பிடித்த நடிகை அமலா பால்தான் என அவரை புகழ்ந்து பேசினார். இதனால் இம்ப்ரஸ் ஆன அமலா பால் அந்த ரசிகரை அங்கேயே கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.
View this post on InstagramA post shared by 🎸Creater Musiq 40k 🔵 (@musiq._.mania) on
முத்தம் கொடுத்த காட்சி
வேலையில்லா பட்டதாரி 2 படம் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதன் புரமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. அமலா பால் ரசிகர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சி தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











