குந்த வைத்து உட்கார்ந்தவாறு அமலாபால் வெளியிட்ட வித்தியாசமான பிக்ஸ்!

சென்னை : ஊரடங்கில் கண்டபடி ஊர்சுற்றி வரும் நடிகை அமலாபால் இப்பொழுது ரூஃப் டாப்பில் குந்த வைத்து உட்காந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற லஸ்ட் ஸ்டோரி என்ற அடல்ட் திரைப்படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வரும் அமலாபால் மேலும் சில மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆண் நண்பர்களுடன் கூத்தடிப்பது, கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது என படு பிசியாக இருந்து வரும் அமலாபால் இப்பொழுது ஆபத்தான ரூஃப் டாப்பில் குந்த வைத்து உட்காந்துகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், ஆடை என சமீபகாலமாக தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை அமலாபால் இப்பொழுது "அதோ அந்த பறவை போல" என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

கண்ணிமைக்காமல் பார்க்கக்கூடிய அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் "அதோ அந்த பறவை போல" திரைப்படத்தில், அமலாபால் பறந்து பறந்து சண்டை இடுகின்றவாறு வெளியான டிரைலரை அடுத்து திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல்

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல்

ஆடை திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்கவைத்த அமலா பால் அதில் காமினி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். முன்னணி நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் இந்த கதாபாத்திரத்தில் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அமலா பால் நடித்ததாக சொல்லப்படுகிறது.

மீண்டும் சர்ச்சை திரைப்படம்

மீண்டும் சர்ச்சை திரைப்படம்

ஆடை திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது அதை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடல்ட் திரைப்படம்

அடல்ட் திரைப்படம்

இந்தியில் வெளியான "லஸ்ட் ஸ்டோரிஸ்" என்ற அடல்ட் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. அதில் இப்பொழுது அமலாபால் நடித்து வருகிறார். திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் அமலாபால், நிஜத்திலும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வேற லெவல் வைரலாகி வருகிறார்.

ஜாலியாக ஊர்சுத்தும்

ஜாலியாக ஊர்சுத்தும்

ஊரடங்கில் பலரும் வீட்டில் அடங்கிக் கிடக்க அமலா பால் மட்டும் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அவை வேறு விதமாக பார்க்கப்பட்டது.

மண்டைய ஒடிச்சிக்காத ஆத்தா

மண்டைய ஒடிச்சிக்காத ஆத்தா

இந்நிலையில் இப்பொழுது உயரமான மலைக் குன்றுகளால் சூழப்பட்ட சொகுசு பங்களாவில் ஆபத்தான ஒரு ரூஃப் டாப்பில் அசால்டாக குந்த வைத்து உக்காந்து கொண்டு அமலா பால் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வரும் நிலையில், கீழ விழுந்து மண்டைய ஒடிச்சிக்காத ஆத்தா என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X