7 வயதில் துரத்தி துரத்தி லவ் செய்த அமலாபால்.. யார் அந்த நபர் தெரியுமா?

சென்னை : நடிகை அமலா பால் விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

சிந்து சமவெளி, ஆடை உள்ளிட்ட அதிரடி படங்களில் நடித்தவர். மென்மையான கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பியவர்.

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வரும் 12ம் தேதி கடாவர் என்ற படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையொட்டி தற்போது அமலா பால் பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் தன்னுடைய முதல் படத்திலேயே சிந்து சமவெளி என்ற அதிரடி படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து மைனா உள்ளிட்ட இவரது படங்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரிட் லிஸ்ட்டில் உள்ளவை.

நீடிக்காத திருமணம்

நீடிக்காத திருமணம்

இவர் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் சில ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஓடிடியில் ரிலீசாகும் கடாவர் படம்

ஓடிடியில் ரிலீசாகும் கடாவர் படம்

இவரது ஆடை படம் அதிரடியாக வெளியாகி இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதனிடையே தற்போது கடாவர் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களில் தற்போது அமலா பால் ஈடுபட்டுள்ளார்.

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி

இதையொட்டி விஜய் டிவியில் நேற்றிரவு ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இடக்கு மடக்கான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அமலா பால். நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ராஜு, பிரியங்கா உள்ளிட்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அமலா பால்.

2 -3 முறை லவ் பெயிலியர்

2 -3 முறை லவ் பெயிலியர்

அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த அமலா பால் தனக்கு இதுவரை 2 -3 முறை லவ் பெயிலியர் ஆனதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஹார்ட் பிரேக் தான் நம்முடைய வாழ்க்கையின் பெரிய பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு உறவு பிரேக் ஆவதற்கு இரு தரப்பிலும் காரணங்கள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

7 வயதில் காதல்

7 வயதில் காதல்

தொடர்ந்து பேசிய அவர், தான் திரையரங்கில் சென்று கார்னர் சீட்டில் காதலனுடன் படம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். கார்னர் சீட் புக் செய்தால்தான் யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து தான் தன்னுடைய 7 வயதிலேயே ஒருவரை துரத்தி துரத்தி காதல் செய்ததாகவும் அவரைத்தான் திருமணம் செய்யவுள்ளதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

அமலா பால் டீன் ஏஜ் காதல்கள்

அமலா பால் டீன் ஏஜ் காதல்கள்

அமலா பால் இவ்வாறு வெளிப்படையாக தன்னுடைய டீன் ஏஜ் காதல்கள் குறித்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே போல்டான முடிவுகளை எடுப்பவர் அமலா பால் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இவ்வாறு தன்னுடைய இமேஜ் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம்

காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம்

7 வயதில் அமலா பாலுக்கு ஏற்பட்ட இந்தக் காதல் கண்டிப்பாக காதல் இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர் மீதான ஈர்ப்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல், அதை காதல் என்றும் அதுவும் துரத்தி துரத்தி காதல் செய்ததாகவும் அமலா பாடல் கூறியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப் பருவ காதல்கள்

பள்ளிப் பருவ காதல்கள்

தற்காலத்திய சினிமாவில் பள்ளிப் பருவ காதல்கள் அதிகமாக காட்டப்படுகின்றன. இதன்மூலம் காதல் என்பதற்கு புது அர்த்தம் பிறப்பித்து வருகின்றன. இதன்மூலம் இளம் சமுதாயத்தினருக்கு ஈர்ப்பிற்கும் காதலுக்குமான வித்தியாசம் தெரியாமல் போகிறது. அந்தவகையில் தேர்ந்த நடிகையான அமலா பால் தன்னுடைய காதல் குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் அதிகமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X