Jyotika Daughter: ஜோதிகா மகள் வாங்கிய பட்டம்.. அமலா பாலின் ரியாக்‌ஷனைப் பாருங்க!

மும்பை: நேற்று மாலையில் இருந்து அதாவது மே 30ஆம் தேதி மாலையில் இருந்து இணையவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியாக பகிரப்பட்டு வரும் விஷயம் என்றால் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியரின் மகளான தியா பெற்ற பட்டம் குறித்தான தகவல்கள் தான். நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றியவர் சூர்யா. தற்போது தியாவுக்கும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜோதிகா மற்றும் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் இருந்து மும்பைக்கு குடியேறி விட்டார்கள். இவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு காரணமாக பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். ஆனால் ஒரு முறை சூர்யா இது தொடர்பாக பேசிய பின்னர் தான் அவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தது தொடர்பான கிசுகிசுக்கள் அடங்கியது. இது தொடர்பாக சூர்யா பேசுகையில், மகளின் படிப்புக்காக மும்பைக்கு குடிபெயர்ந்து உள்ளோம். சென்னையில் சர்வதேச பள்ளிகள் குறைவு, அதனால்தான் நாங்கள் மும்பைக்கு வந்துள்ளோம். மேலும் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் இத்தனை ஆண்டுகளாக எங்களுடன் சென்னையில் இருந்தார். இப்போது அவர் தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால் நாங்கள் இங்கு குடிபெயர்ந்தோம்" என்று கூறினார்.

Actress Amala Paul Reaction About Suriya Jyotika Daughter Diya s Convocation

தியா: சூர்யா - ஜோதிகா தம்பதியருக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் தியாவின் உயர் படிப்புக்காக தான் இவர்கள் மும்பைக்குச் சென்றார்கள். அதேபோல், தியா கடந்த ஆண்டில் தனது படிப்பின் ஒரு பகுதியாக, ஆவணப்படம் ஒன்றை இயக்கினார். " லீடிங் லைட்" என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்திற்கு மாணவர்கள் அளவிலான குறும்படப் போட்டியில் பரிசு வென்றது. இந்த ஆவணப்படம் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு, சிறந்த திரைக்கதை, சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் என மூன்று விருதுகளை வென்றது.

தியாவுக்கு பட்டமளிப்பு விழா: இது தொடர்பாக ஜோதிகா மற்றும் சூர்யா பெருமையாக தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஜோதிகா, " இது போன்ற அர்த்தமுள்ள மாணவர் குறும்படத்தை எடுத்ததற்காக உன்னை எண்ணி பெருமை அடைகிறேன் தியா" என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தியாவின் படிப்பு முடிந்து நேற்று அவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சூர்யா மற்றும் ஜோதிகா மட்டும் இல்லாமல், சூர்யாவின் பெற்றோர்களான சிவக்குமார் மற்றும் சூர்யாவின் தாயார், அதேபோல் ஜோதிகாவின் பெற்றோர்கள், தியாவின் தம்பி தேவ் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Actress Amala Paul Reaction About Suriya Jyotika Daughter Diya s Convocation

அமலா பால் ரியாக்‌ஷன்: இது தொடர்பான வீடியோவை ஜோதிகா மற்றும் சூர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இவர்களின் இந்த வீடியோ பதிவுக்கு நடிகை அமலாபால் கமெண்ட் செக்‌ஷனில் மூன்று சிவப்பு நிற இதயங்களைப் பதிவிட்டுள்ளார். அதேபோல், மாதவன், விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர், பிக் பாஸ் அன்ஷிதா, தொகுப்பாளினிகள் கிகி, அர்ச்சனா, பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட பலரும் லைக்குகளை தட்டி விட்டுள்ளார்கள். பலரும் சூர்யா - ஜோதிகா மட்டும் இல்லாமல் அவர்களின் மகள் தியாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X