கல்லூரி நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையா? விமர்சகர்களுக்கு பளார் பதிலடி கொடுத்த அமலா பால்!
எர்ணாகுளம்: நடிகை அமலா பால் சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாளத்தில் நடித்துள்ள படமான லெவல் கிராஸ் என்ற படத்தின் புரோமோஷனுக்காக கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கல்லூருக்குச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து சென்றிருந்தார் அமலா பால். இதனைப் பார்த்த பலரும் படிக்கும் மாணவர்கள் இருக்கும் கல்லூரி நிகழ்ச்சிக்கு வரும் அமலா பால் இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவது என மோசமான மற்றும் தகாத கமெண்ட்டுகளை அள்ளி வீசினர். இதற்கு நடிகை அமலா பால் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதற்கு பிறகு கர்ப்பமான ஒவ்வொரு மாதத்திலும் அவர் புதியது புதியதாக போட்டோ ஷூட் மற்றும் தன்னுடைய கணவரோடு அடிக்கடி ரீல்ஸ் மற்றும் அவுட்டிங் வீடியோக்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். அமலாபாலின் வளைகாப்பு புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது.

ஜூன் 11ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து அமலாபால் தங்களது குழந்தையுடன் வீட்டிற்கு வரும்போது குழந்தை மற்றும் அமலா பாலுக்கு அவருடைய கணவர் க்யூட்டான வரவேற்பு அளித்திருக்கிறார். வீட்டில் பலூனால் அலங்கரித்து அமலா பாலுக்கு அவருடைய கணவர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன்னுடைய மகனுக்கு இலாய் (ILAI) என்று பெயர் வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தொல் தெரிவித்திருந்தார் அமலாபால். இலாய் என்பது யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயர், இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று கூறப்படுகிறது.
பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகி விடுவார்கள். ஆனால் நடிகை அமலா பால் தனது பிரசவத்திற்குப் பின்னரும் சினிமாவில் மிகவும் பிசியாகவே இருக்கின்றார். நடிகை காஜல் அகர்வாலும் அவருக்கு குழந்தை பிறந்த பின்னரும் கூட நடிப்பில் பிசியான நடிகையாக இருக்கின்றார்.
லெவல் கிராஸ்: இந்நிலையில் நடிகை அமலா பால் சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாளத்தில் நடித்துள்ள படமான லெவல் கிராஸ் என்ற படத்தின் புரோமோஷனுக்காக கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கல்லூருக்குச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து சென்றிருந்தார் அமலா பால். இதனைப் பார்த்த பலரும் படிக்கும் மாணவர்கள் இருக்கும் கல்லூரி நிகழ்ச்சிக்கு வரும் அமலா பால் இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவது என மோசமான மற்றும் தகாத கமெண்ட்டுகளை அள்ளி வீசினர்.
நச் பதிலடி: இது தொடர்பாக தெரிந்து கொண்ட நடிகை அமலா பால், மோசமான கமெண்ட்ச் செய்தவர்கள் கன்னத்தில் 'பளார்' விட்டது போல் பிரச்னை எனது உடையில் இல்லை, உங்களது கேமராவில் (பார்வையில்) உள்ளது என பதிலடி கொடுத்து விட்டார். இது மட்டும் இல்லாமல் நான் ஷார்ட்ஸ் அணிந்து சென்றது அந்த கல்லூரி மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.
தனிநபர் உரிமை: நடிகை அமலா பாலின் இந்த பதிலடி பதிவுக்கு பலரும் அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகையோ தனிநபரோ என்ன உடை உடுத்தவேண்டும் என்பதையோ அல்லது அவர் உடுத்தியுள்ள உடை குறித்து தகாத வகையில் கருத்து தெரிவிப்பதோ என்பது மிகவும் கீழ்த்தரமான செயல். அவரவர் உடை என்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிடக் கூடாது என்பதை ஒரு சமூகமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











