amala paul: காதல் கணவருக்கு லிப் லாக்.. படு ரொமான்ஸ்.. ஹனிமூன் கொண்டாடும் அமலா பால்!
சென்னை: நடிகை அமலா பால் தனது கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அமலா பாலின் தாயார் கேரள மாநில காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து சினிமாவிலும் அவருக்கான கதவு திறந்தது. அதனை பயன்படுத்தி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
சர்ச்சை நாயகி: நடிகை அமலா பால் நடித்த சிந்து சமவெளி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மாமனாரை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்ததால், முதல் படத்திலேயே சர்ச்சை நாயகி என பெயர் எடுத்தார். இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனாவில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு, அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

கணவரை பிரிந்தார்: இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது.
இரண்டாவது திருமணம்: அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த அமலா பால் இணையத்தில் தத்துவத்தை பேசி புலம்பிவந்தார். சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அமலா பால், கடாவர் படத்தை தயாரித்து மீண்டும் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். அண்மையில் இவர் நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

செம ரொமான்ஸ்: புதுமண தம்பதிகளான இவர்கள் தேன் நிலவை கொண்டாடி வரும் நிலையில், தனது காதல் கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுத்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அடடா.. அடடா என்ன ரொமான்ஸ் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











