அமலாபாலின் புதிய வெப் சீரீஸ்... இன்றிரவு ஓடிடியில் ரிலீஸ்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு

ஐதராபாத் : நடிகை அமலா பால் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் குடி யடமைத்தே என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

இன்றிரவு 8 மணிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த தொடரின் ட்ரெயிலரை அமலா பால் வெளியிட்டுள்ளார்.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

தற்போது வெப் சீரிஸ் அதிகமாக வரத்துவங்கியுள்ளன. கொரோனா காரணமாக வீட்டில் மக்கள் அதிக நேரத்தை செலவழிப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்த வெப் தொடர்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதால் அதை சப்ஸ்கிரைப் செய்வதன்மூலம் இந்த தொடர்களை பார்த்துவிட முடியும்.

நடிகர்கள் ஆர்வம்

நடிகர்கள் ஆர்வம்

நடிகர் நடிகைகளும் இத்தகைய தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இத்தகைய தொடர்களில் நடித்து வருகின்றனர். நடிகைகளிலும் தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா உள்ளிட்டவர்களும் வெப் தொடர்களில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளனர்.

அமலா பால் நடிப்பு

அமலா பால் நடிப்பு

இந்நிலையில் நடிகை அமலா பால் தெலுங்கில் குடி யடமைத்தே என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடர் நேரடியாக ஆஹா வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில் அமலாபால் காவல் அதிகாரியாக வந்து விசாரணை மேற்கொள்வதாக கதை காணப்படுகிறது.

வெளியிட்ட அமலாபால்

வெளியிட்ட அமலாபால்

இந்நிலையில் இதன் ட்ரெயிலரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இன்று இரவு 8 மணி முதல் இந்த தொடரை காணலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ட்ரெயிலரில் மிரட்டலாக காணப்படுகிறார் அமலா பால். அடுத்தடுத்த கொலை உள்ளிட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X