லூசியா படத்தை இயக்கிய டைரக்டருடன் கைகோர்த்த அமலா பால் புது வெப் சீரிஸ்... 16ம் தேதி ரீலீசாக இருக்கு
சென்னை : நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளத்தில் அவர் நடித்துவரும் படங்கள் ரிலீசுக்கு தயாராகிவரும நிலையில் அவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
கன்னடத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சீரிசில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பிசியான நடிகை
நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் தமிழில் அதோ அந்தப் பறவை போல மற்றும் காடவர் உள்ளிட்ட படங்களும் மலையாளத்தில் ஆடுஜீவிதம் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

நடித்து முடித்த அமலா பால்
இந்நிலையில் தற்போது அமலா பால் கன்னடத்தில் உருவாகியுள்ள குடி யெடமைதே என்னும் வெப் சீரிசில் நடித்து முடித்துள்ளார். டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த சீரிசில் அவர் துர்கா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பவன் குமார் இயக்கம்
லூசியா, யூ டர்ன் போன்ற விருது பெற்ற படங்களை இயக்கிய கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. ராகுல் விஜய் டெலிவரி பாயாக நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் ஜூலை 16ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

நடிகர்கள் ஆர்வம்
தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பேமிலி மேன் 2, நவம்பர் ஸ்டோரி மற்றும் லைவ் டெலிகாஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் நடித்து அவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் அமலா பாலும் களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











