எஸ்.. ஐ அம் இன் லவ்.. முன்னாள் கணவருக்கு கல்யாணமான நிலையில் காதலர் குறித்து மனம் திறந்த அமலா பால்!

Recommended Video

Aadai Press Meet - நிர்வாணமா எப்படி நடிச்சேன் தெரியுமா?

சென்னை: முன்னாள் கணவருக்கு கல்யாணம் முடிந்துள்ள நிலையில் அமலா பால் தனது காதலர் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏஎல் விஜயும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இருவரும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்தி வந்தனர். இயக்குநர் விஜயை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.

கடந்த 11ஆம் தேதி திருமணம்

கடந்த 11ஆம் தேதி திருமணம்

ஆனால் இதுவரை ஒத்துக்கொள்ளாமல் இருந்த விஜய் சமீபத்தில் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்நது கடந்த 11ஆம் தேதி இயக்குநர் விஜய், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார்.

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி

இந்நிலையில் அமலா பால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு நடிகை அமலா பால் பேட்டியளித்து வருகிறார்.

நான் காதல் உறவில் உள்ளேன்

நான் காதல் உறவில் உள்ளேன்

இந்நிலையில் அமலா பால் தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இணையதளம் ஒன்றிற்கு நடிகை அமலா பால் பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர் தான், தற்போது காதல் உறவில் இருப்பதாக கூறினார்.

தயார்படுத்திக்கொள்ள வேண்டும்

தயார்படுத்திக்கொள்ள வேண்டும்

ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்தப் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன் அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வளவு அன்பை காட்டுகிறார்

அவ்வளவு அன்பை காட்டுகிறார்

நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம். தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார்.

அவருக்கு தெரியும்

அவருக்கு தெரியும்

எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டுவிட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார்.

மூன்றாவது கண்

மூன்றாவது கண்

எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார் அவர். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான்.

என் வாழ்வின் உண்மை

என் வாழ்வின் உண்மை

அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான் என்று தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அமலா பால்.

எப்போது திருமணம்

எப்போது திருமணம்

ஆனால் தனது காதலர் யார்? எப்போது திருமணம் என்பது குறித்தெல்லாம் அமலா பால் எதுவும் கூறவில்லை. இதுவரை தனது காதல் குறித்தோ, தனது காதலர் குறித்தோ வாய்திறக்காத அமலா பால் தனது முன்னாள் கணவரான இயக்குநர் விஜய்க்கு திருமணமானதும் தனது காதலர் குறித்த தகவலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X